ஹோட்டலில் நிர்வாணமாக உட்கார்ந்து சாப்பிடலாம்...இங்க இல்ல பாஸ் லண்டனில் !
லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புதுமையாக 'தி பனியாடி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள ஹோட்டல் திறக்கப்பட உள்ளது. இங்கு செயற்கையாக தயாரிக்கப்படாமல் முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.
அந்த ஹோட்டலில் தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளில் தூய்மை கேடுகள் எதுவும் இருக்காது. அதில் ரசாயன பொருட்கள், செயற்கை தனமான வண்ணங்கள் கலக்கப்பட மாட்டாது. உணவு சாப்பிடும் இடத்தில் மின்சார வசதி, செல்போன் மற்றும் டெலிபோன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது.

இவை அனைத்தையும் விட உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் இஷ்டப்படி ஆடையுடன் இருக்கலாம் அல்லது ஆடை இல்லாமலும் இருக்கலாம். இது வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பொருத்தது. பாதி உடை அணிந்தும் உணவு அருந்தலாம். இங்கு ஒயின் மட்டுமே சப்ளை செய்யப்படும். விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மற்ற மதுபான வகைகள் சப்ளை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு நிர்வாணமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு ‘பர்த்டே' அறை ஒதுக்கப்படும். இந்த ஹோட்டலுக்கு இந்தியில் ‘பனியாடி' என பெயரிட்டுள்ளனர். இதற்கு தமிழில் ‘அடிப்படை' என அர்த்தமாகும். இந்த புதுமையான ஹோட்டலை லண்டனை சேர்ந்த செப்லியாலி என்பவர் தொடங்க உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சாப்பிட வரும் பொது மக்கள் எந்தவித கட்டுப்பாடும் கவலையுமின்றி மகிழ்ச்சியாக இரவு பொழுதை கழிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஹோட்டலை பார்த்து பார்த்து பிரத்யேகமாக வடிவமைத்துள்ளோம்.
இங்குள்ள அறைகள் முழுவதும் மூங்கிலால் அமைக்கப்பட்டுள்ளது. அறைகளுக்கு மெழுகுவர்த்தி வழங்கப்படும். உணவு வகைகள் மண் பாத்திரத்தில் சமைத்து வழங்கப்படும். சனிக்கிழமைகளிலும் உணவு விடுதி திறந்து இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சைவப்பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்களுக்கு என்று தனித்தனியாக உணவு வழங்கப்படுகிறது. இங்கு 42 இருக்கைகளே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஹோட்டல் தொடங்குவதற்கு முன்பே இதற்கு ‘கிராக்கி' அதிகரித்துள்ளது. 44,200 பேர் ‘புக்' செய்து ‘வெயிட்டிங் லிஸ்ட்' டில் அதாவது காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications