ராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரியில் பிறந்தார்- உ.பி.அயோத்தியில் கிடையாது- நேபாள பிரதமர் ஒலி 'அடம்'
காத்மண்டு: ராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் பிறந்தார்; இந்தியாவின் உத்தரப்பிரதேசத்து அயோத்தியில் ராமர் பிறக்கவில்லை என நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீண்டும் கூறியிருப்பது சர்ச்சையை விஸ்வரூபமாக்கி இருக்கிறது.
Recommended Video
இந்தியாவுடன் மல்லுக்கட்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் நேபாள பிரதமர் ஒலி. இந்திய நிலப்பகுதிகளை சொந்தம் கொண்டாடி நேபாள வரைபடத்தில் இணைத்தார் ஷர்மா ஒலி.

ராமர் குறித்து சர்ச்சை
அத்துடன் நிற்காமல் ராமர், நேபாளத்தில்தான் பிறந்தார் என திடீரென கூறி சர்ச்சைக்கு வித்திட்டார். இதனால் அவர் பதவி விலக வேண்டிய நெருக்கடி எல்லாம் ஏற்பட்டது. ஒருவழியாக அந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ராமர் கோவில் பூமிபூஜை
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

ஷர்மா ஒலி பஞ்சாயத்து
இதனிடையே நேபாள பிரதமர் ஷர்மா ஒலி மீண்டும் ராமரின் பிறப்பை முன்வைத்து பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார். ராமர் பிறந்தது தெற்கு நேபாளத்தில் அயோத்தியாபுரியில்தான்; இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இல்லவே இல்லை என அடித்துச் சொல்லி இருக்கிறார் ஷர்மா ஒலி.

புது கட்சி தொடங்கும் ஒலி?
இந்தியாவை சீண்டி சீனாவை குளிர்விக்கும் வகையில் ஷர்மா ஒலி செயல்பட்டு வருகிறார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. ஷர்மா ஒலியின் இந்த போக்கால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியே இரண்டாக பிளவுபடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சீனா ஆதரவாளர்களைக் கொண்ட புதிய கட்சியை ஷர்மா ஒலி உருவாக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications