150 இறந்த உடல்கள்.. 1 வாரம்.. தெரு தெருவாக சுற்றிய லாரியால் பரபரப்பு!
Recommended Video

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் 150 இறந்த உடல்களுடன் தெரு தெருவாக சுற்றும் லாரி ஒன்றால் மக்கள் பெரிய அளவில் பீதிக்கு உள்ளாகி உள்ளனர்.
அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் மெக்சிகோ பல விதமான பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறது. அந்த நாட்டில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் அமெரிக்காவிற்கு முறையில்லாமல் குடியேறுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் மெக்சிகோவின் கோடலஜாரா என்ற பகுதியில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு 150 இறந்த உடல்களுடன் தெரு தெருவாக சுற்றும் லாரி ஒன்றால் மக்கள் பெரிய அளவில் பீதிக்கு உள்ளாகி உள்ளனர்.

என்ன லாரி
இந்த லாரியில் என்ன இருக்கிறது என்று அங்கு இருக்கும் மக்களுக்கு முதலில் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது என்று அந்த லாரியை அடிக்கடி இடமாற்ற சொல்லி இருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். இந்த லாரியை எங்கள் வீடு முன் நிறுத்த வேண்டாம், தெருவில் நிறுத்த வேண்டாம் என்று அடிக்கடி அதை இடமாற்ற வைத்து இருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க நாற்றம்
ஆனால் அப்போதும் கூட, அதற்குள் என்ன இருக்கிறது என்று மக்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த லாரியில் இருந்து அதிக அளவில் நாற்றம் அடிக்கவே, போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின்பே போலீஸ் வந்து விசாரணை செய்து உண்மை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அதன் உள்ளே முழுக்க முழுக்க இறந்த மனிதர்களின் பழைய உடல்கள் இருந்துள்ளது.

எத்தனை உடல்கள்
அந்த லாரிக்குள் சுமார் இறந்த 150 உடல்கள் இருந்துள்ளது. இது எல்லாம் ஒரு மாதத்திற்கு முன் இறந்த மனிதர்களின் உடல்கள் ஆகும். இவர்களுக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை என்பதால், அப்படியே புதைக்க முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் புதைக்க இடம் இல்லாததால் கடைசியில் இப்படி தூக்கிக் கொண்டு சுற்றி வருகிறார்கள்.

இடமில்லையா
ஆம், உண்மையிலேயே மெக்சிகோவில் தற்போது இத்தனை உடல்களை புதைக்க இடமில்லையாம். இதனால், இதை கடந்த ஒருவாரமாக லாரியில் அங்கும் இங்கும் கொண்டு சென்று சமாளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த பகுதியில் இந்த வாரம் புதிய இடம் இதற்காக தயார் செய்யப்பட உள்ளதால், அப்போது இதை புதைக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications