குண்டு வெடித்தது போல் அதிபயங்கர சத்தம்... பதறிப் போன ஒபாமாவின் வெள்ளை மாளிகை!
வாஷிங்டன் : அமெரிக்கா அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் குண்டு வெடித்தது போல் அதி பயங்கர சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த பத்திரிக்கையாளர் அறை இழுத்து மூடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அலபாமாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்காக தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் சென்ற ஒபாமாவை சந்திப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் பலர், நேற்று வெள்ளை மாளிகையில் கூடியிருந்தனர்.
அப்போது, வெள்ளை மாளிகையின் வடக்கு புல்வெளிப் பகுதியில் அதி பயங்கரமான சத்தம் கேட்டது. குண்டு வெடித்ததைப் போன்று அச்சத்தம் இருந்ததால், வெள்ளை மாளிகையில் இருந்த அனைவரும் அச்சமடைந்தனர்.

உடனடியாக, அமெரிக்க ரகசிய சேவை பிரிவு வெள்ளை மாளிகையின் பத்திரிக்கையாளர் அறையை இழுத்து மூடினர். பின்னர், சத்தத்திற்கான காரணம் குறித்து அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது வெள்ளை மாளிகை அருகே நின்றிருந்த உணவு வாகனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தே சத்தத்திற்கு காரணம் எனக் கண்டு பிடிக்கப் பட்டது.
ஆனபோதும், வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விபத்து ஏதேச்சையாக ஏற்பட்டதா அல்லது தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியா என்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications