Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனா டூ ஜப்பான் 2400 கிலோமீட்டர் பயணம்... காதலியை பார்க்க கரடி வேடம் - காதலனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

சீனாவில் இருந்து காதலியை பார்க்க 2400 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஜப்பான் போன காதலன் ஒருவர், கரடி வேஷம் போட்டுக்கொண்டு போய் கடைசியில் அதிர்ச்சியடைந்து திரும்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: நாடு விட்டு நாடு போய் காதலியை பார்க்கப் போய் அந்த காதலி வேறொரு நபருடன் இருப்பதைப் பார்த்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் ஒரு காதலருக்கு இருந்தது. சீனாவில் இருந்து ஜப்பானுக்கு 2400 கிலோமீட்டர் பயணம் செய்து காதலியை பார்க்கப் போன காதலன் கரடி வேடம் போட்டுக்கொண்டு போய் சர்ப்ரைஸ் கொடுக்கப் போன போது அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த காதலி வேறொரு நபருடன் இருந்ததைப் பார்த்து ட்விட்டரில் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த இளைஞருக்கு ஆதரவாக பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

T_Radiosonde என்ற ட்விட்டர் பதிவில் நான்கு புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. அதில் எனது காதலிக்கு சர்ப்ரைஸ் தருவதற்காக நான் சீனாவில் இருந்து 2400 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜப்பானுக்கு சென்றேன். கரடிபோல உடையணிந்து அவன் முன்னாள் போய் நின்று சர்ப்ரைஸ் தர நினைத்தேன். ஆனால் இது முழுக்க முட்டாள்தனமான முயற்சி என்று குமுறியுள்ளார்.

Lover wear bear costume girl friend shock surprise

அவரது ட்விட்டர் பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீட்விட் செய்துள்ளனர். 90000 பேர் வரை லைக் செய்துள்ளனர். எக்கச்சக்க கமெண்டுகள் அந்த நபருக்கு ஆதரவாகவும், அந்த பெண்ணிற்கு எதிராகவும் பதிவிட்டுள்ளனர். ஆனாலும் அந்த புகைப்படங்கள் ஒரு சோக காதல் கதையே சொல்கிறது.

கரடி வேடம் போட்ட ஒருவர் ஆசை ஆசையாக தனது காதலியைப் பார்க்கப் போகிறார். அது ஓரு ஷாப்பிங் மால். அங்கே அந்த நபரின் காதலி வேறொரு நபருடன் நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறார். அதைப்பார்த்து சோகமாக அந்த நபர் தனது முகத்தில் இருக்கும் முகமுடியை கழற்றுகிறார். அதுவரை பேசாமல் இருந்த அந்த பெண் கரடி வேடத்தில் வந்திருப்பது தனது காதலன்தான் என்று தெரிந்து அதிர்ச்சியாகிறாள். அந்த நபர் சோகமாக நடையைக் கட்ட அந்த பெண் பின்னாலேயே ஓடிப்போய் தனது காதலனை கட்டித்தழுவிக்கொள்கிறாள். ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படங்களும், கமெண்டும் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+