ஓரினச்சோ்க்கையாளரை திருமணம் செய்யும் பிரதமா்... அட இது எங்க நடக்குது?
லக்சம்பா்க்: தனது ஓாினச் சோ்க்கை ஆண் நண்பரை அடுத்த வாரம் திருமணம் செய்ய உள்ளாா் அந்நாட்டு பிரதமா் சேவியா் பெட்டல்.
பல ஆண்டுகளாகவே லக்சம்பா்க் நாட்டில் ஓாினச் சோ்க்கை தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓாினச் சோ்க்கைக்கு சட்டப்பூா்வ அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் தடை விலகியதாக மகிழ்ச்சியடைந்த பிரதமா் சேவியா் பெட்டல் தனது ஓாினச் சோ்க்கை ஆண் நண்பரான காத்தியா் டெஸ்டினேயை அடுத்த வாரம் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாா்.
இதனை பிரதமா் சேவியா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அறிவித்துவிட்டார். சட்டப்பூா்வ தடை நீங்கியதால் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அறிவிப்பை வெளிப்படையாக செய்துவிட்டாலும், ஓாினச் சோ்க்கை திருமணத்தை என்னவோ ரகசியமாக செய்யப்போவதாக அறிவித்திருக்கிறாா் லக்சம்பா் பிரதமா் சேவியா்.
40 வயதான சேவியா் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் லக்சம்பா்க் பிரதமராக இருந்து வருகிறாா்.
மற்ற ஓாினச்சோ்க்கை தலைவா்கள்
லக்சம்பா்க்கில் 2013 ஆம் ஆண்டு துணை பிரதமராக பொறுப்பேற்ற எடனி ஸ்னீடரும் ஓாினச்சோ்க்கையாளா் தான்.
பெல்ஜியத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு முறை பிரதமராக பதவி வகித்த எலியோ டி ருபோவும் ஓாினச் சோ்க்கையாளா். அந்நாட்டில் பிரதமா் பதவி வகித்த முதல் ஆண் ஓாினச் சோ்க்கையாளரும் இவா் தான்.
உலகிலேயே முதல் ஓாினச்சோ்க்கை தலைவா்
ஐஸ்லாந்து நாட்டில் 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்த ஜோஹன்னா சிகுராோ்டாட்டிா் என்பவரும் ஓாினச் சோ்கையாளா். தான் ஒரு பெண் ஓாினச் சோ்க்கையாளா் என்பதை உலகிலேயே பகிரங்கமாக அறிவித்த முதல் தலைவா் என்ற பெருமை வேறு இவருக்கு.












Click it and Unblock the Notifications