Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூதாட்டியை மிரட்டிய ரோபோ.. கைது செய்து கூட்டி சென்ற அதிகாரிகள்.. பரபரப்பை கிளப்பிய வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ரோபோக்கள் பயன்பாடு இப்போது பரவலாக அதிகரித்து வரும் சூழலில், அது தொடர்புடைய ஆபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பொது இடத்தில் வயதான பெண் ஒருவரை ரோபோ ஒன்று துன்புறுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் போலீசாரும் தலையிட்ட நிலையில், ரோபோ கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த காலத்தில் பல்வேறு துறைகளிலும் ரோபோக்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. ரோபோகள் எப்போதும் டயர்ட் ஆகாது. ஒரே வேலையை எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் சலிப்பே இல்லாமல் செய்யும் என்பதால் ரோபோ பயன்பாடும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாகச் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் ரோபோக்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

Macau Humanoid Robot Arrest After Scaring 70-Year-Old Woman You re Making My Heart Race Video

பெண் ரோபோ

இதற்கிடையே சீனாவின் மக்காவ்வில் வயதான பெண் பயமுறுத்தியதால் மனித உருவ ரோபோ ஒன்று கைது செய்யப்பட்ட விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.. அந்த ரோபோவுக்கும் 70 வயது மூதாட்டிக்கும் இடையிலான நடந்த உரையாடல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள ஒரு கல்வி மையம் நடத்திய கண்காட்சியின்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நடைபாதையில் ரோபோ அங்குச் செல்வோருடன் உரையாடிக் கொண்டு இருந்துள்ளது. அந்த ரோபை பற்றித் தெரியாமல் அதன் அருகே சென்ற 70 வயதுப் பெண் சென்றுள்ளார். அப்போது அந்த ரோபோ திடீரென அசைந்து இவருடன் பேச்சுக் கொடுக்க முயன்றுள்ளது. இந்த திடீர் அசைவால் பயந்து அந்த பெண் அதிர்ச்சியுற்றுத் தடுமாறினார்.

அச்சுறுத்திய ரோபோ

பயந்துபோன அந்த மூதாட்டி, "எனக்குப் பயமாக இருக்கிறது.. உனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதைப் போய் பார்.. ஏன் இங்கு வந்து விளையாடுகிறாய்? உனக்கு என்ன பைத்தியமா?" என்று ரோபோவைப் பார்த்து கோபமாகக் கத்தினார். அந்த மூதாட்டி பயத்தில் கத்திக் கொண்டு இருக்கும்போது, ரோபோ இரு கைகளையும் தூக்கியபடி நின்றது. அங்கிருந்த பலரும் இதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இருவரும் அப்படியே இருக்கவே.. அங்கிருந்த சிலர் உடனடியாக போலீசாருக்கு அழைப்பு விடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அந்த மூதாட்டியைப் பத்திரமாக அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அவருக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உடல்நிலையில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

கைது

சலசலப்புக்குப் பிறகு, காவலர்கள் அங்கிருந்து ரோபோவை அப்புறப்படுத்தினர். போலீசார் சொன்னதைக் கேட்டு அந்த ரோபோவும் அவர்களுடன் அமைதியாகச் சென்றது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தான் நெட்டிசன்கள் பலரும் ரோபோவை போலீசார் 'கைது' செய்ததாகச் சொல்லிப் பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் தனது தரப்பு நியாயத்தைச் சொல்ல இந்த ரோபோவுக்கு ஒரு வழக்கறிஞர் தேவை எனக் கிண்டல் செய்தார்.

ஆபத்து இருக்கு

இது விளையாட்டாகத் தோன்றினாலும் கூட ரோபோக்களால் எந்தளவுக்குக் குழப்பம் ஏற்படலாம் என்பதையே இது உணர்த்துவதாக இருக்கிறது. பொது இடங்களில் முறையான கண்காணிப்பு இல்லாமல் ரோபோக்களை அனுமதிக்கக்கூடாது என நெட்டிசன்கள் வலியுறுத்தினர். எதாவது எமர்ஜென்சி என்றால் ஒரே நொடியில் ரோபோவை ஆஃப் செய்யக்கூடிய ஸ்விட்ச்கள் வேண்டும் என்றும் அதுபோன்ற ஸ்விட்ச் இருக்கும் ரோபோக்களை மட்டுமே பொதுவெளியில் அனுமதிக்க வேண்டும் என்றும் நெட்டிசனக்ள் பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+