"ஆண்மை நீக்கம்.." சபாஷ் சரியான தண்டனை! சிறார்களை பலாத்காரம் செய்தால் அவ்வளவுதான்.. மடகாஸ்கர் அதிரடி
மாடகாஸ்கர்: சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மடாக்ஸகர் அரசு மிக கடுமையான தண்டனையை இப்போது அறிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்தே வருகிறது. இதுபோன்ற பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நடவடிக்கையை எடுத்து வருகிறது.

அதன்படி ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கிழக்கு மடகாஸ்கர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மிகக் கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஆண்மை நீக்கம்: அந்நாட்டின் சட்டத்துறை துறை அமைச்சர் இது தொடர்பாக முக்கிய மசோதாவை கொண்டு வந்தார். இந்த புதிய சட்டத்தின்படி சிறார்களைப் பலாத்காரம் செய்பவர்களுக்கு காஸ்ட்ரேட், அதாவது ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பிறகு இந்த மசோதா மேல் சபையிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதிபர் ஒப்புதலுக்காக இது அனுப்பப்பட்டுள்ளது. இந்த புது சட்டத்தின்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு கெமிக்கல் காஸ்ட்ரேஷன் செய்யப்படும், சில மோசமான வழக்குகளில் அறுவைசிகிச்சை மூலம் காஸ்ட்ரேஷன்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம் என்ன: இருப்பினும், இந்தச் சட்டத்திற்கு பல்வேறு சர்வதேச அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாலியல் பலாத்கார குற்றங்களைத் தடுக்க இது சரியான நடவடிக்கை இல்லை என்பதே அவர்கள் வாதமாக இருக்கிறது. இருப்பினும், இதை ஏற்க மறுக்கும் மடகாஸ்கர் நாட்டில் உள்ள ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். பலாத்கார கலாச்சாரத்தைத் தடுக்க இது நிச்சயம் உதவும் என்பதால் இந்த சட்டம் வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மடகாஸ்கர் நாட்டில் குழந்தைகள் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருவதால் இந்தச் சட்டம் தேவை என்று சட்டம் தேவை என்று அந்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் லாண்டி ம்போலாட்டியான தெரிவித்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 600 சிறார் பலாத்கார வழக்குகள் நடந்துள்ளதாகத் தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் லாண்டி ம்போலாட்டியான, இந்தாண்டு ஜனவரி மாதம் மட்டும் 133 பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதற்காக இந்த புதிய சட்டம்: மேலும் அவர், "மடகாஸ்கர் இறையாண்மை கொண்ட ஒரு நாடாகும்.. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புது சட்டங்களைக் கொண்டு வரும் முழு உரிமையும் மாடகாஸ்கர் அரசுக்கு உள்ளது. இந்த கொடூர குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளைத் தடுக்க தற்போதுள்ள தண்டனை போதுமானதாக இல்லை என்பதாலேயே இந்த புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்" என்றார்.

இந்த புதிய சட்டத்தின்படி 10 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் காஸ்ட்ரேஷன் செய்யப்படும்.. 10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அறுவை சிகிச்சை அல்லது கெமிக்கல் மூலம் காஸ்ட்ரேஷன் செய்யப்படும்.. அதேநேரம் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு கெமிக்கல் காஸ்ட்ரேஷன் செய்யப்படும்.
காஸ்ட்ரேஷன்: கெமிக்கல் காஸ்ட்ரேஷன் என்பது ஒரு வகை ஆண்மை நீக்கம்.. இருப்பினும், இது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும். அதேநேரம் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் ஆண்மை நீக்க நடவடிக்கையை மீண்டும் சரி செய்யவே முடியாது. இந்த தண்டனையைத் தான் இப்போது மடகாஸ்கர் அரசு கொண்டு வந்துள்ளது. குழந்தைகளைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மாடகாஸ்கர் அரசு அறிவித்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications