2013ல் அதிக வருமானம்... இளம் கலைஞர்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் மடோனா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: 2013ம் ஆண்டின் அதிக வருவாய் ஈட்டிய பாப் இசைக் கலைஞராக 55 வயது அமெரிக்கப் பாடகி மடோனா தேர்வாகியுள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இளம் பாப் பாடகர்களான லேடி காகா, ரிஹானா மற்றும் பீபர் போன்ற இளம் தலைமுறை பாப் பாடகர்களை வருமானத்தில் பின்னுக்குத் தள்ளியுள்ளார் மடோனா.

முதல் இடத்தில்....

முதல் இடத்தில்....

பாப் குயின் என அழைக்கப்படும் 55 வயது அமெரிக்க பாப் கலைஞரான மடோனா, கடந்த 2012 ஜூன் முதல் 2013-ம் ஆண்டு மே மாதம் வரை சம்பாதித்தது ரூ.787 கோடியாம்.

2வது இடத்தில்....

2வது இடத்தில்....

இரண்டாவது இடத்தில் ரூ 504 கோடி வருவாயுடன் லேடி காகா உள்ளார்.

3வது இடத்தில்...

3வது இடத்தில்...

மூன்றாவது இடத்தை ரூ.497 கோடியுடன் பான் ஜோவி 3-ம் இடம்பெற்றுள்ளார்.

4வது மற்றும் 5வது இடம்...

4வது மற்றும் 5வது இடம்...

நான்காவது இடத்தில் டாஃபி கெய்த்தும், ஐந்தாவது இடத்தை ராக்கர்ஸ் கோல்ட்ப்ளேயும் பெற்றுள்ளார்கள்.

6வது இடத்தில் பைபர்....

6வது இடத்தில் பைபர்....

இளம் பெண்களின் தூக்கத்தைக் கெடுப்பவராக புகழ் பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு இந்த வரிசையில் ஆறாவது இடம் தான் கிடைத்துள்ளது. இவரது இந்தாண்டு வருமானம் 58 மில்லியன் டாலர் ஆகும்.

லாபம்....

லாபம்....

பாப் பாடகர்களின் வருமானம் என்பது அவர்களது நிகழ்ச்சிகள் மூலம் பெற்ற பணம் மட்டுமல்ல. மேலும், அவர்கள் பங்கெடுத்த விழாக்கள், விளம்பரங்கள், அவர்களது படைப்புகளின் விற்பனை, காப்புரிமை போன்றவைகளின் மூலம் கிடைத்த லாமமும் ஆகும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+