Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நல்லாருக்கீங்களா" என்று கேட்க வந்த இடத்தில் இந்தம்மா செஞ்ச வேலையைப் பாருங்க மக்களே!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: மாபியா கும்பல் தலைவர் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு வருகை தந்த மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்த மாபியா கும்பல் தலைவருடன் விசிட்டர்ஸுக்கான அறையில் "ஜாலியாக" இருந்ததை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்து அவரை அம்பலப்படுத்தியுள்ளனர் சிறை நிர்வாகிகள்.

ரஷ்யாவில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. ரஷ்யாவன் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் ஓப்ளாஸ்ட் என்ற ஊரில் உள்ள சிறையில் இந்த கூத்து நடந்துள்ளது.

Mafia boss secretly filmed having physical relationship in prison with 'human rights activist'

அந்த சிறையில் ஒரு மாபியா கும்பலின் தலைவர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க அடிக்கடி ஒரு பெண் மனித உரிமை ஆர்வலர் வருகை தருவார். மாபியா கும்பல் தலைவருக்கு சிறையில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படுகிறதா என்பதை சோதிப்பதற்காக அவர் அடிக்கடி வருவார். சட்டத்திற்குட்பட்டு அவர் வருவதால் சிறை அதிகாரிகள் அவரை அனுமதித்து வந்தனர்.

அப்படி சிறைக்கு வரும்போதெல்லாம் தனி அறையில் அந்த மாபியா தலைவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார். ஆனால் அவர்கள் அறைக்குள் நீண்ட நேரம் இருந்து வந்தது சிறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. இதையடுத்து அந்த அறையில் ரகசிய வீடியோ கேமராவைப் பொருத்தினர் அதிகாரிகள்.

இந்த நிலையில் அந்த காமராவில் பதிவான காட்சிகள் தற்போது மீடியாவில் லீக் ஆகி விட்டது. தனி அறையில் இருவரும் உடல் ரீதியான உறவில் ஈடுபட்டது அதில் தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பதிவான காட்சிகள் இவை என்று தெரிகிறது.

அறைக்குள் அந்தப் பெண் நுழைந்த சில நிமிடங்களிலேயே இருவரும் கட்டித் தழுவிக் கொள்கின்றனர், முத்தமிடுகின்றனர். இருவரும் பின்னர் உடைகளைக் களைந்து விட்டு அங்கே உள்ள சோபாவில் அமர்ந்து உடல் உறவில் ஈடுபடுகின்றனர். பின்னர் அப்பெண் வெளியேறுகிறார்.

இந்த மாபியா தலைவருக்கு சிறையில் தனி அறை கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். இந்த அறையைப் பார்த்தாலே அவர் எந்த அளவுக்கு சொகுசாக இருந்து வருகிறார் என்பதும் புலனாகிறது.

தற்போது இந்த வீடியோ ரஷ்யாவில் வைரல் ஆகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+