ஜப்பானின் இன்று காலை நிலநடுக்கம் – ரிக்டரில் 6.6 ஆக பதிவு -சுனாமி எச்சரிக்கை இல்லை
டோக்கியோ: ஜப்பானின் இன்று 6.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டு நேரப்படி அதிகாலை 2.32 மணிக்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள ஜப்பானின் வடகிழக்குப் பகுதியான ஹொக்கைடோ தீவுகளில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்நிலநடுக்கத்தினால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை என்று தெரிய வந்துள்ளது. இத்தீவு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள குரில் தீவுகளுக்கு அருகில் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலநடுக்கத்தின் மையப் புள்ளியானது குரில்ஸ்க் நகரத்தில் இருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் ரஷ்ய பிரதேசத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த நகரமான நியூமரோ, நிலநடுக்க புள்ளியில் இருந்து 291 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
குரில் தீவானது ஜப்பான் மற்றும் ரஷ்யா இரண்டுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, இப்பகுதி ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications