குலுங்கிய மியான்மர்! சக்திவாய்ந்த நிலநடுக்கம்! கொல்கத்தாவில் அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்
கொல்கத்தா: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கொல்கத்தா, வங்கதேசத்திலும் உணரப்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். இந்த நிலையில் இன்று மாலையில் மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வங்கதேசத்திலும், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா வரையிலும் உணரப்பட்டது. மியான்மரின் அக்யாப் மாகாணத்தின் கிழக்கே 70 மைல் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டு நிலநடுக்கம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 71 மணி நேரத்தில் மியான்மரில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் திடீரென ஏற்பட்ட அதிர்வுகளால் உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடத்திற்கு வெளியே வந்தனர். நில அதிர்வை உணர்ந்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பலரும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். நில அதிர்வு காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications