ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சம்
டோக்கியோ: இன்று ஜப்பானின் வடக்குப் பகுதியில் மிகச்சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானிய நேரப்படி மாலை 4:53 மணி (இந்திய நேரப்படி மதியம் 1:23 மணி) அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.
ரிக்டர் அளவில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடக்கு இவாட் மாகாணத்தின் கடல் பகுதியில், 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவானது.

நிலநடுக்கம் காரணமாக, ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் (JMA), இவாட், அமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களுக்கு 3 மீட்டர் (10 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகள் எழக்கூடும் என்று சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோக்கியோவில் இருக்கும் பெரிய கட்டிடங்களே அதிரும் அளவிற்கு இந்த நிலநடுக்கம் வலுவாக இருந்துள்ளது. நிலநடுக்க பாதிப்புகள் காரணமாக புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
ஜப்பான் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை போல, நேற்று இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
சுமத்ரா தீவின் நியாஸ் பகுதிக்கு வடமேற்கே 48 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்தோனேசியா 'நெருப்பு வளையம்' பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications