மாயமான மலேசிய விமானத்தை விமானி திட்டமிட்டே கடலில் மூழ்கடித்தார்? பகீர் தகவல்
கான்பெரா: 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை விமானி திட்டமிட்டே கடலில் மூழ்கடித்திருக்கலாம் என விசாரணை குழு சந்தேகம் எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய விமானம் எம்எச் 370 கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு புறப்பட்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் பறந்த போது கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீரென மாயமானது.

அந்த விமானத்தை தேடும் பணியில் மலேசிய, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டன. இதில் எந்த தகவலும் கிடைக்காததால் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் புலனாய்வு அமைப்பு மாயமான விமானம் குறித்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் டான்சானியா நாட்டுக் கடற்பகுதியில் மாயமான விமானத்தின் இறக்கை உள்ளிட்ட உதிரி பாகங்கள் கடந்த ஜூன் மாதம் கண்டெடுக்கப்பட்டன.
இந்த உதிரிபாகங்களை ஆய்வு செய்த ஆஸ்திரேலிய விசாரணைக் குழு விமானம் செங்குத்தான நிலையில் கடலில் செலுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளது. விமானியால்தான் விமானம் கடலுக்குள் விபத்துக்குள்ளாப்பட்டிருப்பதாகவும் விசாரணை குழு சந்தேகம் எழுப்பியுள்ளது.
விசாரணைக்குழுவின் இந்த புதிய சந்தேகத்தால் மாயமான மலேசிய விமான விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications