மாயமான மலேசிய விமானம் குறித்து துப்பு தந்தால் ரூ 30 கோடி பரிசு... பயணிகளின் உறவினர்கள் அறிவிப்பு
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.30 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல்வேறு நாடுகளின் உதவியுடன் கடந்த 2 மாதங்களாக விமானத்தை தேடும் பணி நடத்தப்பட்டது. ஆனால், மாயமான விமானம் குறித்து இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே விமானம் மாயமான சம்பவத்தில் மலேசிய அரசு உண்மைகளை மறைப்பதாக அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

மறுப்பு...
இதனால் பயணிகள் இறந்ததாக மலேசிய அரசு தர முன்வந்த இறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள அவர்கள் மறுத்து விட்டனர்.

சன்மானம்...
முன்னுக்குப் பின் வெளியாகும் முரணான தகவல்களால் குழப்பத்தில் ஆழ்ந்த பயணிகளின் உறவினர்கள், விமானம் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் என அறிவித்துள்ளனர்.

கூட்டமைப்பு...
எனவே அவர்கள் ஓர் கூட்டமைப்பை உருவாக்கி மாயமான விமானம் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ 29 கோடியே 63 லட்சத்து ஐம்பதாயிரம் பரிசுத் தொகையை தர இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை...
அதிக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால், விமானம் குறித்த தகவல் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்

தேடும் பரப்பளவு விரிவு...
இதற்கிடையே மலேசிய விமானத்தை தேடும் பரப்பளவு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications