நேபாளத்தில் வாத்துக்கூட்டத்தில் மோதிய மலேசிய விமானம்... கண்ணாடி உடைந்தது
காத்மாண்டு: நேபாள் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வாத்துகள் மீது மோதியது. இதில் விமானத்தின் கண்ணாடி உடைந்துள்ளது.
ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போல நேபாள அதிகாரிகள் கமுக்கமாக இருந்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே ஒரு மலேசிய விமானம் காணாமல் போய் பல நாட்களாகி, உலக நாடுகள் பலவும் ஒன்று கூடி கடல் கடலாக அலசி ஆராய்ந்து வரும் நிலையில் இன்னொரு மலேசிய விமானம் அபாயகரமான விபத்திலிருந்து தப்பியுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

180 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் மலேசியாவில் இருந்து கிளம்பிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 114 நேற்று முன்தினம் இரவு நேபாள் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது வாத்துக் கூட்டம் ஒன்று திடீரென குறுக்கே புகுந்துள்ளது. அவை விமானத்தின் வின்ட்ஷீல்டில் மோதியது. இதனால் விமனம் தரையிறங்கியபோது அதன் கண்ணாடிகள் உடைந்து ஓடுதளத்தில் சிதறின. இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை.
இருப்பினும் விமான சிப்பந்திகள் இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கவில்லை. மேலும் விமானிகளும் கூட தகவல் தராமல் கமுக்கமாக இருந்து விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஜெட் ஏர்வேஸ் சிப்பந்திகள் அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகே மலேசிய விமானத்தின் கேப்டன் விபத்து நடந்ததை உறுதி செய்தார். இதையடுத்து ஓடுதளத்தில் சோதனையிட்டபோது 10 வாத்துக்கள் இறந்து கிடந்ததும், கண்ணாடி துண்டுகள் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவை ஓடுதளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
இதையடுத்து கோலாலம்பூருக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் ரிப்பேர் செய்யப்பட்ட பிறகு அதிகாலை 3.30 மணிக்கு கிளம்பியது.
ஏற்கனவே மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் மாயமாகியுள்ள நிலையில் மற்றொரு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications