மலேசிய விமான விபத்து: 239 பேரின் குடும்பத்துக்கு தலா 5000 டாலர் இழப்பீடு
கோலாலம்பூர்: மலேசிய விமான விபத்தில் உயிரிழந்த 239 பேரின் குடும்பத்தினருக்கு தலா 5000 டாலர் இழப்பீடு தர மலேசிய அரசு முன்வந்துள்ளது.
கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு கடந்த 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. இதுநாள் வரை தேடப்பட்டு வந்த மலேசிய விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக 16 நாட்களுக்கு பிறகு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த விமானத்தில் பயணம் செய்த தங்களது உறவினர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செலவில் சீனத் தலைநகர் பீஜிங், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்களில் தங்கியிருந்தவர்களுக்கு இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, கோலாலம்பூர் மற்றும் பீஜிங் நகரில் உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகங்களின் முன்பு விபத்துக்குள்ளான விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்து பலியான 239 பயணிகளின் உறவினர்களுக்கும் தலா 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 3 லட்சம் ரூபாய்) இழப்பீடாக வழங்கப்படும் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications