மலேசிய விமானம் மாயமானது திட்டமிட்ட செயல்: நியூசிலாந்து புத்தகத்தில் திடுக் தகவல்
வெல்லிங்டன்: 239 பேருடன் சீனா புறப்பட்ட மலேசிய விமானம் மாயமானது விபத்து அல்ல அது வேண்டும் என்றே செய்யப்பட்டது என்று இன்னும் வெளிவராத புத்தகத்தின் ஆசிரியர்கள் இருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. பின்னர் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது.

100 நாட்கள்
விமானம் மாயமாகி 100 நாட்கள் ஆகியும், அதை 26 நாடுகள் தேடும்போதிலும் அது குறித்து இதுவரை எந்தவித தகவல் இல்லை. இந்நிலையில் விமானத்தை நிச்சயம் கண்டுபிடிப்போம் என்று மலேசிய அரசு உறுதி அளித்துள்ளது.

ஆசிரியர்கள்
நியூசிலாந்தைச் சேர்ந்த விமானியும், ஹாமில்டன் நகர கவுன்சிலருமான இவான் வில்சன் மற்றும் பத்திரிக்கையாளர் ஜியோப் டெய்லர் ஆகியோர் சேர்ந்து மாயமான மலேசிய விமானம் குறித்து குட்நைட் மலேசியன் 370: தி ட்ரூத் பிஹைன்ட் தி லாஸ் ஆஃப் பிளைட் 370 என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர். இந்த புத்தகம் இன்னும் வெளிவரவில்லை.

விபத்து
எம்.ஹெச். 370 விமானம் மாயமானது விபத்து அல்ல. அது வேண்டும் என்றே செய்யப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும். இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் விமானத்தில் பயணம் செய்வோருக்கு அதிர்ச்சி அளிக்கும் என்று புத்தகத்தின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசியா
ஆசிரியர்கள் வில்சன் மற்றும் டெய்லர் ஆகியோர் மலேசியா சென்று அதிகாரிகள் மற்றும் மாயமான விமானத்தின் விமானி ஜஹரி அகமது ஷாவின் குடும்பத்தாரையும் பேட்டி கண்டுள்ளனர்.

மலேசிய அரசு
விமானம் மாயமானது குறித்து மலேசிய அரசு எதையோ மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் வில்சன் மற்றும் டெய்லர் விமானம் மாயமானது விபத்து அல்ல என்று கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications