தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடரும்- மலேசியா அரசு

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்துறை துணை அமைச்சர் டாக்டர் இஸ்மாயில் முகமது சைட் தெரிவித்தார்.

மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. மலேசியாவின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கமும் உள்ளது.

Malaysia will retain LTTE on terror groups list

இதனால் மலேசியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மலேசியா நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பக்கத்தான் ஹராப்பான் எம்.பி வில்லியம் லியோங் ஜீ கீன், 2009-ல் புலிகள் இயக்கம் செயல் இழந்துவிட்ட பின்னரும் ஏன் தடை நீட்டிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் இஸ்மாயில் முகமது சைட், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ளது.

பொது ஒழுங்கு, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் கைவிட முடியாது; ஆகையால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையையும் நீக்க முடியாது; அந்த தடை தொடரும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+