மலேசியா விமான விபத்து: சென்னை பெண் பலி?
கோலாலம்பூர்: வியட்நாம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 5 இந்தியர்களில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரிகாசர்மா என்பவரும் ஒருவர். எனவே அவர் இந்த விபத்தில் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது.
காலை 6.30 மணியளவில் பீஜிங் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 2 மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.

இதனால் பதற்றமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானம் தொடர்பு எல்லைக்குள் இருந்து மாயமாகி விட்டதாக அறிவித்தனர்.
கடலில் விழுந்த விமானம்
இதற்கிடையில், வியட்நாமின் தோ சூ தீவில் இருந்து 153 மைல் தொலைவில் உள்ள தென் சீனக் கடலுக்குள் அந்த விமானம் விழுந்து விட்டதாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், விமானத்தில் இருந்த 239 பயணிகளின் கதி என்ன ஆயிற்று? என்ற அச்சமும், கவலையும் ஏற்பட்டுள்ளது.
5 இந்தியர்களின் கதி?
இந்த விமானத்தில் 5 இந்தியர்களும் பயணித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் பெயர்கள் சேத்னா கொலேகர், சுவனந்த் கொலேகர், சுரேஷ் கொலேகர், பிரகலாத் ஷிர்சதா, சந்திரிகா ஷர்மா என தெரிய வந்துள்ளது. கனடாவில் வாழும் இந்திய வம்சாவழியினரான குக்தேஷ் முகர்ஜியும் இந்த விமானத்தில் சென்றுள்ளார்.
சென்னைப் பெண்
விபத்துக்குள்ளான விமானத்தில் சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினர் சந்திரிகா சர்மா (51) பயணித்தது தெரியவந்துள்ளது.
இதனால் வேளச்சேரியில் உள்ள அவரது குடும்பத்தினர் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விமான விபத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளனர்.
சந்திரிகா சர்மா ஹரியானாவைச் சேர்ந்தவர். சென்னையில் வேளச்சேரியில் கணவருடன் வசித்து வந்தார். அவர்களுக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகள் இருக்கிறார்.
மங்கோலியாவில் நடைபெறும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் மலேசியாவில் இருந்து பீஜிங் செல்லும் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.
விமானத்தில் இருந்த 239 பேரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications