ஆண் குழந்தை இல்லை... மனைவியை அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கணவர்
பெய்ஜிங்: மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவர் ஒருவர், அவரை அரை நிர்வாணப்படுத்தி தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் யாஷன் கவுண்டியை சேர்ந்தவர் ஷாங் (39). இவரது மனைவி வாங் நி (33). இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஷாங் பக்கத்து நகரத்தில் உள்ள சொத்து வளர்ச்சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

ஷாங்கிற்கு தனக்கு மகன் இல்லையே என்ற கவலை இருந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், குடிப்பழக்கத்திற்கு ஆளான ஷாங், வீட்டிற்கு வருவதையும் குறைத்தார்.
இதனால் வாங் நிக்கும் மற்றொரு ஆணுக்கும் தொடர்பு இருப்பதாக அவர்களது வீட்டை சுற்றி வதந்தி பரவியது. இதைக் கேட்டு கோபமடைந்த ஷாங், மனைவியுடன் தகராறு செய்துள்ளார். வாங்கை அடித்து உதைத்த ஷாங், அவரை அரை நிர்வாணமாக்கினார்.
அதனைத் தொடர்ந்து வாங்கின் கையில் ஒரு அட்டையில், "நான் எனது உடலை விற்க விரும்புகிறேன்" (ஈ நன்ட் டொ செல்ல் ம்ய் பொட்ய்) என எழுதி, அவரை வீதி முழுவதும் வலம் வர வைத்தார். மனைவியைக் கண்காணிக்கும் விதமாக காரில் பின் தொடர்ந்தும் வந்துள்ளார் ஷாங்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று வாங்கை மீட்டனர். இது தொடர்பாக விசாரணைக்கு வாங் அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையில் வாங் நடத்தை மீது கூறப்பட்ட புகார்கள் ஆதாரம் அற்றவை என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஷாங் மனைவி வாங்கிடம் மன்னிப்பு கோரினார்.
ஆனால் அவரது மன்னிப்பை வாங் ஏற்று கொண்டாரா என்பது குறித்து தெரியவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications