ஷார்ஜாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது.. மனைவி, இரண்டு குழந்தைகளும் தவிப்பு
ஷார்ஜாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உறவினருக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவரை ஷார்ஜா போலீஸார் கைது செய்தனர்.
அபுதாபி : தமிழகத்தைச் சேர்ந்தவர் உறவினருக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவரை ஷார்ஜா போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடியை சேர்ந்த ஒருவர் துபையில் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவரது உறவினருக்காக வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவர் பேசியபடி வங்கிக்கு செலுத்த வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஊருக்கு சென்று விட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் ஷார்ஜா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டதால் அவர் தங்கியிருந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டது.
இதனால் அவரது மனைவியும், இரண்டு பிள்ளைகளும் வேறு ஒருவரது வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் அவரது குடும்பத்தினரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த குடும்பத்தினர் தற்போது விசா காலம் முடிந்தும் தங்கியுள்ளனர். அதனால் துபை இமிக்ரேசன் மூலம் கடிதம் பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த குடும்பத்தினருக்கு தேவையான உணவு, பயண சீட்டு மற்றும் பொருளாதார உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு உதவும் நல்லுள்ளம் படைத்தோர் 055 1045305 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications