இவரு பயங்கர கோபக்காரரு போல.. கடிக்க வந்த கரடியோட நாக்கையே கடிச்சு துப்பிட்டாரே!

ரஷ்யாவில் தன்னை தாக்கிய கரடியிடம் இருந்து தப்பிப்பதற்காக, அதன் நாக்கை வாலிபர் ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவில் தன்னை தாக்கிய கரடியின் நாக்கை வாலிபர் ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் நாக்கை கடித்த கணவர், தன்னை கடித்த பாம்பின் தலையை கடித்து துப்பிய விவசாயி, கணவனின் காதை கடித்து துப்பிய மனைவி, இப்படி நிறைய செய்திகளை படித்திருப்போம். ஆனால் ரஷ்யாவில் ஒருவர் கரடியின் நாக்கை கடித்து துப்பிய சம்பவம் முற்றிலும் விநோதமானது.

அதெப்படி கரடி வாய்க்குள் இவர் வாய் போச்சுன்னு யோசிக்கிறீங்களா... ரொம்ப யோசிக்க வேண்டாம், முழு கதையையும் நாங்களே சொல்றோம்.

மான் கொம்பு வேட்டை:

மான் கொம்பு வேட்டை:

ரஷ்யாவில் உள்ள செர்பிய வனப் பகுதியில் தான் இந்த விநோத சம்பவம் நடந்திருக்கு. 30 வயசான நிக்கோலே இர்ஜித்தும், அவருடைய இரண்டு நண்பர்களும் துவா வனப்பகுதியில் உள்ள அடர்ந்தக் காட்டுக்குள் மான் கொம்பு தேடி போயிருக்காங்க.

கரடி தாக்குதல்:

கரடி தாக்குதல்:

இரண்டு நண்பர்களும் ஒருபக்கம் போக, இர்ஜித் மட்டும் அடர்ந்த காட்டுக்குள்ள மேற்கொண்டு போயிருக்காரு. அப்போ தான் அவரை அந்த கரடி தாக்கி இருக்கிறது. கரடிகிட்ட இருந்து தப்பிக்க, கடுமையா போராடியிருக்காரு இர்ஜித். ஆனா அந்த கரடி, இர்ஜித்த கடுமையா தாக்கிடுச்சு.

பயந்து போன கரடி:

பயந்து போன கரடி:

கரடிகிட்ட இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லாம, அதோடு நாக்கை வாயால கவ்வி கடிச்சுத் துப்பியிருக்காரு இர்ஜித். வலி தாங்க முடியாத கரடி, இர்ஜித்த பார்த்து பயந்து ஓடிப்போச்சு. அதுக்கப்புறம் நண்பர்களுக்கு தகவல் சொல்லி, அங்கிருந்து மருத்துவமனையில போய் சேர்ந்திருக்காரு இர்ஜித்.

இது தான் காரணம் பாஸ்:

இது தான் காரணம் பாஸ்:

என்னப்பா நடந்துச்சு, நீ ஏன் கரடியின் நாக்க கடிச்சன்னு கேட்டா, "நான் பாட்டுக்கு காட்டுக்குள்ள சும்மா தான் நின்னுட்டு இருந்தேன். திடீர்ன்னு அந்த கரடி வந்து என்னை அட்டாக் பண்ணிடுச்சு. பயத்துல நான் கத்த ஆரம்பிச்சுட்டேன். அப்பவும் அது என்ன விடல. அதனால தான் கரடி நாக்க கடிச்சு துப்புனேன்"னு பதில் சொல்லாரு இர்ஜித்.

நாக்கு பத்திரம்:

நாக்கு பத்திரம்:

கரடிக்கு நாக்கு போன மாதிரி, இர்ஜித்துக்கும் உடம்பெல்லாம் காயம். முகம் முழுவதும் தையம் போட்டு வெச்சுருக்காங்க. இர்ஜித் இப்போ கரடிக்கிட்ட இருந்து தப்பிச்சாலும், அவர் மேல சட்டவிரோதமா காட்டுக்குள் நுழைஞ்சதா வழக்கு போட்டிருக்கு போலீஸ். விசாரணையில எந்த போலீஸ்காரரோட நாக்கு போகப்போகுதோ தெரியல. நாக்கு பத்திரம் ரஷ்ய போலீஸ்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+