தம்பி எங்கப்பா உன்னோட பாதி மூளையைக் காணோம்.. ஷாக் ஆன டாக்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் கால் வலி சிகிச்சைக்காக சென்ற நோயாளியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது மூளையின் ஒரு பகுதியைக் காணாததால் அதிர்ச்சி அடைந்தனர்.

கால் பலமில்லாமல் இருப்பதாகக் கூறி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 44 வயது ஆண் ஒருவர். அப்போது அவரது உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவரது மூளை வழக்கத்திற்கு மாறாக சிறிய அளவில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இது மருத்துவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அம்மனிதரின் மூளையை ஆராய்ச்சி செய்து வரும் மருத்துவர் லயனல் பியூலெட், ‘அந்த நோயாளியின் மொத்த மூளையும் சிறிதாக சுருங்கிக் காணப்படுகிறது. ஆனால், அதனால் அவரது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவத்தில் எந்தவித குறைப்பாடும் இருக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

மூளையில் நீர்...

மூளையில் நீர்...

மேலும், இந்த நோயாளி ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது, அவரது மூளையில் நீர் கோர்த்திருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு அப்போதைக்கு டாக்டர்கள் தண்ணீரை டிரெய்ன் செய்யும் சிகிச்சை மூலம் அந்தத் தண்ணீரை ஓரளவுக்கு வெளியேற்றியுள்ளனர்.

அறுவைச் சிகிச்சை...

அறுவைச் சிகிச்சை...

அதன் பின்னர் 14 வயதானபோது, மூளையில் இருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது கருவி ஒன்றின் மூலம் மூளையில் இருந்த நீர் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

டாக்டர்களின் கணிப்பு...

டாக்டர்களின் கணிப்பு...

ஆனால் தற்போது அடுத்த 30 வருடங்களுக்கு இந்தத் தண்ணீர் தொடர்ந்து சேரும் என்று தெரிய வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்தத் தண்ணீர் அதிகம் தேங்கும் நிலை வரும்போது அது மூளையை உடைத்துக் கொண்டு வெளியேறும் என்றும் டாக்டர்கள் கணித்துள்ளனர்.

சாதாரண வாழ்க்கை...

சாதாரண வாழ்க்கை...

ஆனால், தனக்குப் பிரச்சினை இருப்பதே தெரியாமல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் அந்நபர். நல்ல வேலை பார்த்து வரும் அந்நபர், திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக வாழ்ந்து வருகிறார்.

ஐ.க்யூ. குறைவு...

ஐ.க்யூ. குறைவு...

தற்போது அவருக்கு உள்ள ஒரே பிரச்சினை மற்றவர்களை விட ஐக்.யூ அளவு குறைந்து காணப்படுவது தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+