பயங்கர சத்தம்! திடீரென வெடித்துச் சிதறிய 2ஆம் உலக போரின் வெடிகுண்டு..செக் குடியரசில் மோசமான விபத்து
பிராக்: செக் குடியரசு நாட்டில் 2ஆம் உலகப் போர் சமயத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது.
உலக வரலாற்றில் இப்போது வரை மிக மோசமான போராக அறியப்படுவது 2ஆம் உலகப் போர். ஹிட்லரின் நாஜி படைகளைத் தடுத்து நிறுத்த ஒட்டுமொத்த உலக நாடுகளும் திரண்டு வர வேண்டி இருந்தது.
1939ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போர் 1945ஆம் ஆண்டு வரை நீடித்தது. இந்தப் போரில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

செக் குடியரசு
போர் முடிந்து இப்போது 78 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்போது கூட அந்த போர் ஒருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வீசப்பட்டு, வெடிக்காமல் இருந்த ஒரு வெடிகுண்டை அகழ்வாராய்ச்சி சமயத்தில் நீக்க முயன்ற போது அது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒருவர் காயமடைந்தார்.

வெடித்து சிதறியது
செக் குடியரசின் கிழக்குப் புறத்தில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றான ஆஸ்ட்ராவா கடந்த சில நாட்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர், 2ஆம் உலகப் போர் சமயத்தில் வீசப்பட்டு வெடிக்காமல் இருந்த வெடிகுண்டை எடுக்க முயன்ற சமயத்தில் எதிர்பாராத விதமாக அது திடீரென வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

போலீசார்
உயிரிழந்தவர் வெடிகுண்டைப் பழைய கழிவுநீர்க் குழாயாக கருதி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் மேலும் கூறுகையில், "அவர் உலோகத்தை வெட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாகக் குண்டு வெடித்துச் சிதறியது" என்றனர். மேலும், இது வான்வழியில் இருந்து வீசப்பட்ட வெடிகுண்டு என்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.

மக்கள் வெளியேற்றம்
இந்தச் சம்பவத்தில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 31 வயதுடைய நபருக்குத் தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காகக் குண்டு வெடித்துச் சிதறிய இடத்தில் இருந்து 300 மீட்டருக்குள் அமைந்துள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

2ஆம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் வீசப்பட்டு, வெடிக்காமல் இருக்கும் வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் கண்டறிவது இது முதல்முறை இல்லை. 1945ஆம் ஆண்டு வடகிழக்கு செக் குடியரசு பகுதியில் ரஷ்யப் படைகள் இந்த வழியில் தான் முன்னேறியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும், 2ஆம் உலகப் போர் சமயத்தில் வீசப்பட்டு வெடிக்காமல் இருந்த குண்டுகள் காரணமாக மூன்று முறை பொதுமக்கள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications