எமிரேட்ஸ் விமானத்தில் பெண் சிப்பந்தியை முகத்திலேயே குத்திய பயணியால் பரபரப்பு
துபாய்: துபாயில் இருந்து மெல்போர்ன் கிளம்பிய விமானத்தில் பயணி ஒருவர் பெண் சிப்பந்தியை முகத்தில் குத்தியுள்ளார்.
எமிரேட்ஸ் விமானம் ஒன்று இன்று அதிகாலை துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு கிளம்பியது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் படுத்து தூங்குவது தொடர்பாக பெண் சிப்பந்தியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் அந்த பெண்ணை துரத்திச் சென்று முகத்தில் பலமுறை குத்தியுள்ளார்.

இதை பார்த்த சக பயணிகள் 3 பேர் ஓடி வந்து அந்த நபரை அமுக்கிப் பிடித்து இருக்கையோடு கட்டி வைத்துள்ளனர். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அந்த நபரை இருக்கையோடு கட்டி வைக்க உதவியவர்களில் ஒருவரான மேட் நைலர் கூறுகையில்,
அந்த பயணிக்கு 10 ஆண்களின் பலம் இருந்தது. அவர் எமர்ஜென்சி எக்சிட்டுக்கு அருகில் சென்று நின்றதும் ஏதாவது செய்துவிடுவாரோ என்று பயந்தோம். அந்த நபருக்கு கோபம் அதிகமாக இருந்தது. தண்ணீர் கொடுக்க வந்த சிப்பந்தியை கூட தலையால் முட்டித் தள்ளினார். யார் பேசுவதையும் அவர் கேட்கத் தயாராக இல்லை. அவருடன் அழகான சிறுவன் வந்திருந்தான்.
இந்த சம்பவத்தை சிப்பந்திகள் சிறப்பாக கையாண்டனர் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications