3வது மாடியில் தொங்கிக் கொண்டு இருந்த குழந்தை.. கெத்தாக காப்பாற்றிய இளைஞர்.. உறைய வைக்கும் வீடியோ!
3வது மாடியில் தொங்கிக் கொண்டு இருந்த குழந்தை இளைஞர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.
Recommended Video

பெய்ஜிங்: சீனாவில் பொதுவாக வீடுகள் நெருக்கமாகவும், உயரமாகவும் கட்டப்படுவது வழக்கம். மும்பையில் இருப்பது போல அங்கும் பல அடுக்கில் வீடுகள் கட்டப்படும்.
அப்படி ஒரு வீட்டில் தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. மூன்றாவது மாடியில் இருந்து ஒரு குழந்தை கீழே விழும் அளவிற்கு தொங்கி கொண்டு இருந்துள்ளது.
இந்த குழந்தையை இளைஞர் ஒருவர் கெத்தாக காப்பாற்றி இருக்கிறார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

தொங்கிய குழந்தை
சீனாவின் மக்கள் கூட்டம் நிறைந்த 'சே ஜியான்ங்' என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு இருந்த கட்டிடம் ஒன்றில் மூன்றாவது மாடியில் குழந்தை ஒன்று தொங்கிக் கொண்டு இருந்துள்ளது. ஜன்னலுக்கு வெளியே வந்து சிறிய சுவற்றில் ஒட்டிக் கொண்டு இருந்துள்ளது.

யாரும் இல்லை
அந்த குழந்தையின் வீட்டில் யாரும் இல்லை. இதனால் அந்த குழந்தை எப்படி வெளியே செல்வது என்று தெரியாமல் அழுது கொண்டு இருக்கிறது. அதேபோல் அந்த குழந்தையை யாரும் கவனிக்காமல் தங்கள் வேலையை கவனித்து வந்துள்ளனர்.

ஹீரோ
அந்த குழந்தை தொங்கி கொண்டு இருந்ததை பக்கத்தில் கடை வைத்து இருந்த இளைஞர் பார்த்து இருக்கிறார். அவர் உடனடியாக பக்கத்து வீட்டு பால்கனி வழியாக சென்று அந்த குழந்தையை தூக்கி இருக்கிறார். இதனால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
மக்கள் பாராட்டு
தற்போது இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. மக்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள். அந்த குழந்தையை தனியாக விட்டுவிட்டு சென்ற பெற்றோரை போலீசார் கண்டித்து இருக்கிறார்கள். சீனாவில் இது பெரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications