மாஜி மனைவி ஆசிட் வீசி கொலை.. கணவருக்கு 117 ஆண்டு சிறை - ரூ. 10 லட்சம் அபராதம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னாள் மனைவி மீது ஆசிட் வீசிக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு 117 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முல்தான் நகரை சேர்ந்தவர் ஜவேதன் பிபி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் அம்ஜத்தை விட்டுப் பிரிந்தார். விவாகரத்திற்குப் பின் முகமது ரியாஸ் என்பவரை மணந்தார் ஜவேதன் பிபி.
இதனால் ஜவேதன் மீது ஆத்திரத்தில் இருந்தார் அம்ஜத். தன்னை விவகாரத்து செய்து விட்டு வேறொருவரை திருமணம் செய்த பிபிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என அவர் முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிபி வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த அம்ஜத் படுக்கை அறையில் ஒன்றாக இருந்த பிபி மற்றும் அவரது கணவர் ரியாஸ் மீது ஆசிட் வீசி விட்டு தப்பினார்.
இதில், பலத்த காயமடைந்த பிபி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ரியாசுக்கும் மார்பு மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அம்ஜத்தை கைது செய்தனர். முல்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அம்ஜத் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
விசாரணையின் முடிவில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அம்ஜத்துக்கு 117 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications