அமெரிக்கா: ஏர்போர்ட்டில் பெண்கள் பாத்ரூமில் ஆடையை அவிழ்த்து நிர்வாணமாக வாலிபர் ரகளை
பாஸ்டன்: அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ஆடைகளை அவிழ்த்துவிட்டு மேற்கூரையில் ஏற முயன்று கீழே விழுந்துள்ளார்.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநில தலைநகரான பாஸ்டனில் உள்ள லோகன் விமான நிலையத்திற்கு கேமரூன் ஷென்க்(26) என்பவர் வந்துள்ளார். அவர் பெண்கள் கழிவறைக்கு சென்று தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நின்றார். பின்னர் அவர் மேற்கூரையை பிடித்து மேலே செல்ல முயன்று கீழே விழுந்தார். அதன் பிறகு அவர் 84 வயது தாத்தா ஒருவரை தாக்கினார்.

இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் கேமரூனை கைது செய்ய வந்தனர். ஆனால் கேமரூன் போலீசாருடன் போராடினார். இதில் ஒரு போலீஸ்காரருக்கு காயம் ஏற்பட்டது. போலீசார் ஒரு வழியாக அவரை கைது செய்தனர். கழிவறையில் விழுந்ததில் காயம் அடைந்த கேமரூன் மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்கு பிறகு அவர் பாஸ்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவர் ஏன் இவ்வாறு செய்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications