உலகிலேயே அதிக வயதானவர் இந்தோனேஷியாவில் வாழ்கிறார்... அவருக்கு வயது 145!

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 145-வயது என உலகிலேயே அதிக வயதான முதியவர் ஒருவர் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் மத்திய ஜாவாவின், ஸ்ரகேனில் டிசம்பர் 31, 1870 அன்று மபஹ் கோதோ பிறந்துள்ளார். இந்த தகவலானது மபஹ கோதோ வைத்துள்ள அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையானால், உலகிலேயே வயதான நபர் என்ற பெயரை மபஹ் கோதோ பெறுவார்.

 Man who claims he is the world's oldest at age 145

மபஹ் கோதோ தனது உடன்பிறப்புகள் 10 பேர், 4 மனைவிகள் மற்றும் அவரது குழந்தைகளை கடந்து வாழ்ந்து தற்போது கொண்டிருக்கிறார். அவர்கள் அனைவரும் மரணம் அடைந்து விட்டநிலையில், பேரக்குழந்தைகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள், எள்ளுப் பேரக்குழந்தைகளுடன் அவர் தற்போது வாழ்ந்து வருகிறார்.

ஏற்கனவே பிரான்சை சேர்ந்த ஜென்னி கால்மென்ட் என்ற மூதாட்டி தான் அதிக வயதுதானவராக கருதப்பட்டு வருகிறார். அவர் தனது 122-வயதில் மரணமடைந்தார்.

இதனிடையே நீண்ட காலம் உயிர் வாழ்வதன் ரகசியம் குறித்து மபஹ் கோதோவிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு அமைதி தான் காரணம் அளித்துள்ளார் மபஹ் கோதோ. தற்போது தான் இறக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 1992-ம் ஆண்டு அவர் 122 வயதில் இருக்கும் போதே கல்லறை கட்ட திட்டமிடப்பட்டதாம், இந்நிலையில் மபஹ் கோதோ நீடித்த ஆயுள் பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+