38 பேரை கொன்று தின்ற கொடூர கொலைக்காரன்! 15 ஆண்டாய் மொத்த நாட்டையே அலறவிட்டவன் அதிரடி கைது!
உகாண்டா: கடந்த 15 ஆண்டுகளாக 38 பேரை கொன்று அவர்களின் உடல்களை தின்று மொத்த நாட்டையும் அலறவிட்டு தலைமைறைவாகி வந்த கொடூர கொலைக்காரனை உகாண்டா பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் மனித மாமிசம் உண்ணும் இந்த கொடூர கொலைக்காரன் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

உகாண்டா.. இந்த மொத்த நாடும் ஒருவனை கண்டு அஞ்சி நடுங்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் இது உண்மை தான். மொத்த உகாண்டாவும் முஜிரிசி மோசஸ் என்ற நபருக்கு தான் பயந்தது. இதற்கு முக்கிய காரணம் அவனது கொடூரமான கொலைகளும், அதன்பிறகு இறந்தவர்களின் உடல்களை தின்பதும் தான்.
இந்த முஜிரிசி மோசஸ் இரவு நேரத்தில் வீடுகளுக்குள் சென்று பட்டாக்கத்தி வைத்து மொத்த குடும்பத்தையும் வெட்டி கொல்வதும், அதன்பிறகு அவர்களின் உடல்களை ஆடு, கோழி இறைச்சி போல் தின்னும் கொடூர குணம் கொண்டவன்.
கடந்த 2010ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை மொத்தம் 38 பேரை கொன்று அவர்களின் உடல்களை தின்றுள்ளான். உகாண்டாவின் மசகா, இபாண்டா, காசோ உள்ளிட்ட மாவட்டங்களை குறிவைத்து கடந்த 15 ஆண்டுகளாக சீரியல் கில்லராாக வலம் வந்தான். கொடூரம் என்னவென்றால் ஒரு வீட்டுக்குள் நுழைந்தால் அங்கு இருக்கும் பச்சிளம் குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கொன்று அவர்களின் உடல்களை தின்பான்.
இவனது இந்த கொடூர கொலைகளால் மொத்த உகாண்டாவும் அரண்டுப்போனது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2021ம் ஆண்டில் பெந்தோகோஸ்தே போதகர் ஸ்டீபன் முகாம்பே கொலையை சொல்லலாம். உகாண்டாவின் ராகை மாவட்டம் கனபுலிமு கிராமத்தில் போதகர் ஸ்டீபன் முகாம்பே வீட்டிற்குள் சுவரை துளையிட்டு முஜிரிசி மோசஸ் நுழைந்தான்.
பிறகு வீட்டில் இருந்த போதகர் ஸ்டீபன் முகாம்பே, அவரது மனைவி நோவர்ணா நாலுங்கியா, ஜானி நாகிவாலா, பெனா நாகிவும்பி, மேக்ஸ, மரியா, கிறிஸ்டின், கென்னி மற்றும் ஜானி என மொத்தம் 9 பேரை இரக்கமே இன்றி கொடூரமாக கொலை செய்தான். இந்த சம்பவம் மொத்த உகாண்டாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த கொலை பற்றி விசாரித்த போலீசார் முஜிரிசி மோசஸ் தான் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த முஜிரிசி மோசஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். இதுதொடர்பாக உகாண்டா நாட்டின் பாதுகாப்பு படையின் தலைமை தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா கூறுகையில், ''நம் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை சொல்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பாதுகாப்பு படையினர் முஜிரிசி மோசஸ் என்ற கொடிய கொலைகார நபரை கைது செய்துள்ளனர். இவன் உகாண்டா வரலாற்றிலயே மிக மோசமான சீரியல் கில்லர் என்பதோடு, மனித மாமிசம் உண்பவன்.
2010 ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை மசகா, இபாண்டா, காசோ உள்ளிட்ட இடங்களில் இவன் மொத்தம் 38 பேரை கொன்று அவர்களின் உடல்களை தின்றுள்ளான். பொது விசாரணை மேற்கொள்ளப்பட்டு இவனுக்கு நிச்சயம் மரண தண்டனை நிறைவேற்றப்படும்'' என்று கூறியுள்ளார். இதனால் உகாண்டா மக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications
