மதுரை மேலூர் சிறுவன் மரண வழக்கில் நண்பன் கைதானது எப்படி? காட்டி கொடுத்த கருப்பு நிற காயம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மேலூரில் காணாமல் போன சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் அவனது நண்பனும், தாயும் கைது செய்யப்பட்டது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு அருகேயுள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (42). இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

Madurai boy mysterious death

பெரியகருப்பன் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறாராம். சத்யாவும் விவசாய கூலி வேலைக்கு செல்வது வழக்கம். இவர்களது மகன் முத்துவேல் (7), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன் தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டின் அருகில் இருந்த மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

இதனிடையே சத்யா வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டு பிற்பகலில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மகன் இல்லாததால் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். ஆனால் யாருமே தங்களுக்கு தெரியாது என கூறிவிட்டனர். இதனால் சத்யா, தனது உறவினர்களின் உதவியுடன் அந்த பகுதியில் அனைத்து இடங்களிலும் தேடினாராம்.

மேலும் முத்துவேலின் நண்பர்களிடமும் விசாரித்ததாக தெரிகிறது. ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கீழவளவு போலீஸ் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என சத்யா புகார் அளித்தாராம்.

அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து டிரோன் உதவியுடன் சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு பாழடைந்த வீட்டில் முத்துவேல் சடலமாக மீட்கப்பட்டான். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் முத்துவேலின் நண்பனும் அவரது தாய் சந்தியாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது விளையாடும் போது முத்துவேலின் கழுத்தை இறுக்கி மயக்கமடைய செய்து முதுகில் தட்டி அவனை மீண்டும் எழுப்பும்படியாக விளையாடினராம். அப்போது முத்துவேலின் கழுத்தை இறுக்கியதால் அவர் இறந்துவிட்டார்.

மகன் கழுத்தை இறுக்கியதால்தான் முத்துவேல் இறந்தார் என்பதை அறிந்த தாய் சந்தியா, கொலைப் பழியில் இருந்து மகனை காப்பாற்றுவதற்காக அந்த கொலையை மறைத்து, உடலை பாழடைந்த வீட்டில் வீசிவிட்டாராம்.

இந்த சம்பவத்தில் சிறுவனும் அவரது தாயும் கைதாக முக்கிய காரணமாக இருந்தது சிறுவனின் உடலில் இருந்த அடையாளம்தான். சிறுவனின் வாயில் இருந்து ரத்தம் வடிந்தது. கழுத்தில் எதையோ போட்டு இறுக்கிய அடையாளம், நாக்கு தள்ளியிருந்தது, கண்களை சுற்றி கருப்பு நிறத்தில் காயம் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்த அடையாளங்கள், பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவைகளை வைத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+