தனுஷ் பாலிடிக்ஸ் எண்ட்ரி.. ஏற்பாடு செய்த பாஜக! எடப்பாடி கண்டோலில் இல்லாத அதிமுக - மாணிக்கம் தாகூர்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி கண்ட்ரோலில் இல்லை. தனுஷின் அரசியல் வருகை பாஜகவின் செயல்பாடு. வடிவேலுவின் காமெடி போல் பாஜக பல பிளான்களை போட்டு ஒவ்வொருத்தராக அரசியலில் நுழைக்கிறது என விமர்சித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான மாணிக்கம் தாகூர். மேலும், விலைவாசி உயர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி ட்விட் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மாநில தலைவரும் எம்பி,. மான மாணிக்கம் தாகூர் வருகை தந்தார். இவருக்கு பார்த்திபனூர் அருகே மருச்சுக்கட்டு என்ற இடத்தில் கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Manickam Tagore

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய ஓடிய விவகாரம் குறிப்பாக ஊரக பகுதியில் தப்பி ஓடிய விவகாரம் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. தமிழக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

மாணிக்கம் தாகூர்

சிறைத்துறை மற்றும் காவல் துறையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை ஆராய்ந்து தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுக்க வேண்டும். இது ஒரு நாளில் முடியக்கூடிய விஷயம் அல்ல. சிறையில் கைதிகள் ஒருங்கிணைத்து சினிமா பாணியில் தப்பி ஓடிய விஷயம் கவலை அளிக்கிறது. தமிழகத்தில் காவல்துறையில் மற்றும் சிறை துறையில் உள்ள உண்மையான பிரச்சனைகளை கண்டறிய வேண்டும். தமிழகத்தில் சிறை துறையில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய காலம் வந்துவிட்டது.

விலைவாசி உயர்வு

சிறைத் துறையில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை ஆராய்ந்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் விலைவாசி உயர்ந்துள்ளது. கர்நாடகா, கேரளா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் விலைவாசி உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு மத்திய அரசின் பொருளாதார தோல்வி. விலைவாசி உயர்வு மொத்த இந்தியாவுக்கான பிரச்சினை.

எடப்பாடி பழனிசாமி

தமிழ் தமிழ்நாட்டுக்கான பிரச்சினையாக பார்க்க கூடாது. விலைவாசி உயர்வு குறித்து எடப்பாடி பழனிசாமி டுவிட் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தீபாவளி வெட்டி தீபாவளியாக இல்லாமல் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி ஆக இருக்க வேண்டும் என்பதற்கு அரசாங்கம் என்ன செய்கிறது என்பது முக்கியமான விஷயம்.

தனுஷ் பாஜக

அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி கண்ட்ரோலில் இல்லை. தனுஷின் அரசியல் வருகை பாஜகவின் செயல்பாடு. வடிவேலுவின் காமெடி போல் பாஜக பல பிளான்களை போட்டு ஒவ்வொருத்தராக அரசியலில் நுழைக்கிறது. அவர்களின் ப்ளான் ஒர்க் ஆக மாட்டுது. 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறைந்துள்ளது" என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+