கள்ளக்காதலால் பதவியை இழந்த ஜென்சன்.. Nvidia-வின் இடைக்கால பெண் சிஇஓ யார் தெரியுமா? பின்னணி
வாஷிங்டன்: சீன உளவாளி மற்றும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியுடன் கள்ளக்காதலில் இருந்ததாக சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து என்விடியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ பதவியை ஜென்சன் ஹுவாங் இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து நிறுவனத்தின் இடைக்கால சிஇஓவாக கோலேட் கிரேஸ் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக என்விடியா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ''என்விடியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ மற்றும் இயக்கநர் குழு உறுப்பினர் பதவிகளில் இருந்து ஜென்சன் ஹுவாங் விலகி உள்ளார்.
இதனால் என்விடியாவின் இடைக்கால சிஇஓவாக கோலேட் கிரேஸ் (என்விடியாவின் முதல் பெண் சிஇஓ)செயல்பட உள்ளார். இவர் தற்போது என்விடியா நிறுவனத்தில் செயல் துணை தலைவராகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.
நிறுவனத்துக்கு புதிய சிஇஓ தேர்வு செய்யும் வரை கோலேட் கிரேஸ் இடைக்கால சிஇஓவாக செயல்பட ஒப்புக்கொண்டுள்ளார்.
கோலேட் கிரேஸ் இடைக்கால சிஇஓ பொறுப்புடன் தனது தற்போதைய பொறுப்புகளான செயல் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாகவும் தொடர்ந்து செயல்படுவார். சிஇஓ பதவிக்கு நிறுவனத்துக்கு உள்ளேயும், நிறுவனத்துக்கு வெளியேயும் இருந்தும் வரும் நபர்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளனர்.
இடைக்கால சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ள கோலேட் கிரேஸ் 2013 செப்டம்பர் மாதம் என்விடியாவில் பணிக்கு சேர்ந்தார். இப்போது செயல் துணைத் தலைவராகவும் தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். இவர் தனது பதவிக்காலத்தில் நிறுவனத்தின் நிதி கட்டமைப்புகளை வழிநடத்தியதுடன், நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். என்விடியாவில் சேர்வதற்கு முன்பு அவர் சிஸ்கோ மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 25 ஆண்டுகள் நிதி பிரிவுகளில் வெவ்வேறு பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.
கோலேட் கிரேஸின் தேர்வை அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளதோடு, அவர் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகள், வாடிக்கையாளர், செயல்திட்டம் உள்ளிட்டவற்றில் எந்த பாதிப்பும் வராத வகையில் அவர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறோம். இதுபற்றி கோலேட் கிரேஸ் கூறுகையில்,''என்விடியாவின் பலம் எப்போதுமே அதன் ஊழியர்களிடமிருந்தே வருகிறது. ஜென்சன் கட்டி எழுப்பிய இந்த நிறுவனத்தை எங்கள் தலைமை குழுவுடன் இணைந்து அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
கோலேட் கிரேஸ் இடைக்கால சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளது போல் இயக்குநர் குழுவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹார்வி சி ஜோன்ஸ் இயக்குநர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சினாப்சிஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 30 ஆண்டுகளாக தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கோலேட் கிரேஸ்க்கு எங்கள் நிறுவனத்தின் வணிகம், வாடிக்கையாளர், செயல்பாடுகள் மற்றும் நிதி நிலைமை பற்றிய ஆழமான புரிதல் உள்ளது என இயக்குநர் குழு தவைர் ஹார்வி சி ஜோன்ஸ் கூறியுள்ளார்.
என்விடியா நிறுவனத்துக்கு ஜென்சன் ஆற்றிய பங்களிப்பு மிகவும் முக்கியமானவை. உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவமான என்விடியாவை அவர் மாற்றி உள்ளார். நிறுவனத்திற்கும், ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்புகளுக்காக நிர்வாக குழுவும், மொத்த நிறுவனமும் ஜென்சனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதோடு திட்டமிட்டப்பட என்விடியா நிறுவனம் 2027 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு நிதி சார்ந்த முடிவுகளை ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் 17 ம் தேதி வெளியிட உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலமாக என்விடியா நிறுவனத்தின் முதல் பெண் சிஇஓவாக கோலேட் கிரேஸ் செயல்பட உள்ளார். முன்னதாக என்விடியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓவாக செயல்பட்டு வந்த ஜென்சன் ஹுவாங் தனது பதவியை ராஜினாமா செய்ததன்பின்னணியில் கள்ளக்காதல் சர்ச்சை தான் உள்ளது. இவர் சீனாவை சேர்ந்த ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் கள்ளஉறவில் இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் அந்த பெண் சீன உளவாளி என்றும் கூறப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது. அவர் சீன உளவாளி என்று ஜென்சன் ஹுவாங் கூறாவிட்டாலும் கூட தனது கள்ள உறவை ஒப்புக்கொண்டார். நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தனது மனைவியிடம் மன்னிப்பு கோரினார்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த விவகாரம் பூதாகரமானது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ''ஜென்சன் ஹுவாங் திருமணத்தை கடந்த கள்ள உறவில் உள்ளார். நிறுவனத்தில் ஹெல்த்கேர் பிரிவின் துணை தலைவராக இருக்கும் கிம்பெர்லி பவல் உடன் கள்ளக்காதலில் இருக்கிறார்'' என கூறியது. இது அவரது நிறுவனத்துக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜென்சன் ஹுவாங்கிடம் இருந்து தலைவர், சிஇஓ பதவியை பறிக்க 'போர்ட்' உறுப்பினர்கள் முடிவெடுத்த நிலையில் அவரே முன்வந்து ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
