யாரிடமும் ராஜினாமா கடிதம் வாங்கலை.. விஜய் என்ன சொன்னார்? தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
சென்னை: தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் யாரிடமும் ராஜினாமா கடிதமோ, பேப்பரில் கையெழுத்தோ முதல்வர் விஜய் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தவெக எம்எல்ஏ-க்களுக்கு சில அறிவுறுத்தல்களை கொடுக்க விஜய் விரும்பியதாகவும், அதற்காகவே எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னையில் நேற்று ஈசிஆரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் ஸ்ரீநாத், முஸ்தபா மற்றும் விஎஸ் பாபு தவிர்த்து மற்ற அனைவரும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது முதல்வர் விஜய் சில எம்எல்ஏ-க்களிடம் வெத்து பேப்பரில் கையெழுத்து பெற்றதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், துணை சபாநாயகர் ரவி சங்கர் உள்ளிட்டோரையும் விஜய் வார்னிங் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் விஜய் வெத்து பேப்பரில் கையெழுத்து பெற்றாரா என்பது தொடர்பாக கேட்டறிந்தோம். அதன்படி தவெக எம்எல்ஏ தரப்பு பேசுகையில், முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் எம்எல்ஏ-க்களை கண்டித்து பேசியது உண்மை தான்.
ஆனால் வெளியில் சொல்லப்படுவதை போல் விஜய் யாரிடமும் ராஜினாமா கடிதமோ அல்லது வெத்து பேப்பரில் கையெழுத்தோ பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் அப்படி ராஜினாமா கடிதத்தை வாங்கி சபாநாயகரிடம் கொடுத்தாலும், அவர் ஏற்க முடியாது. ஏனென்றால் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளிக்கும் போது, எம்எல்ஏ-க்கள் கைப்பட எழுதி கொடுக்க வேண்டும்.
அந்த கடிதத்துடன் சுயநினைவுடன் தான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறி சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அண்மையில் இசக்கி சுப்பையா ஏற்கனவே டைப் செய்த பேப்பரை கொண்டு வந்த போது, உடனடியாக சொந்தமாக கைப்பட எழுதி கொடுங்கள் என்று சபாநாயகர் அறிவுறுத்தினார். இதனால் ராஜினாமா கடிதம் எல்லாம் யாரிடமும் வாங்கவில்லை.
எம்எல்ஏ-க்கள் சொன்ன விஷயங்களை முதல்வர் விஜய் அவரின் டைரியில் குறிப்பு எடுத்து கொண்டார். அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார். மற்றபடி ராஜினாமா கடிதமோ, பேப்பரில் கையெழுத்தோ யாரிடமும் பெறவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் முதல்வர் விஜய் வேறு சில விஷயங்களை கூறவே கூட்டி இருப்பதாக பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
