சுனைனா ஆபாச வீடியோ.. ஷேர் செய்தாலும் சும்மா விட மாட்டேன்.. கொந்தளித்து வார்னிங் தந்த நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சுனைனாவின் முகத்தைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடிகை சுனைனா தனது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளதுடன், இதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகை நடிகை சுனைனாவின் முகத்தை ஆபாசமான காட்சிகளில் இணைத்து, ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி வருவதாக தெரிகிறது..

Sunaina

நடிகை சுனைனா முகம்

இதை பார்த்து பதறிப்போன சுனைனா, இந்த வீடியோவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.. அத்துடன் இதை உருவாக்கியவர்கள் மற்றும் பரப்பியவர்கள் மீது குற்றவியல் மற்றும் சிவில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுனைனா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக வலைதளங்களிலும், பிற இணையதளங்களிலும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எனது முகத்தை ஆபாசமான உள்ளடக்கத்தில் இணைத்து உருவாக்கப்பட்ட வீடியோ பரவி வருவது எனது கவனத்துக்கு வந்துள்ளது. இந்த உள்ளடக்கம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒன்றாகும். அதில் உள்ள நபர் தோற்றம், சாயல் மற்றும் தனித்துவத்தின் அடிப்படையில் என்னைப் போலத் தோன்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளார்.

ஆபாச வீடியோ - கண்டனம்

இந்த அருவருப்பான மற்றும் தீங்கிழைக்கும் செயலால் நான் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளேன். இதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உள்ளடக்கத்தை உருவாக்கவோ, வெளியிடவோ அல்லது பரப்பவோ நான் எந்த வகையிலும் சம்மதிக்கவில்லை. இதற்கு அனுமதியும் வழங்கவில்லை. இந்த வீடியோவுடன் எனக்குத் தொடர்பு இருப்பதாக வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ கூறப்படுவது பொய்யானது, தவறாக வழிநடத்தக்கூடியது, எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதது.

இது எனது கண்ணியம், தனியுரிமை மற்றும் அடையாளத்தின் மீதான மிகப்பெரிய அத்துமீறலாகும். இது பாலியல் துன்புறுத்தலாகவும், அவதூறாகவும் அமைகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 உள்ளிட்ட இந்தியச் சட்டங்களின்படி இது குற்றமாகும். இத்தகைய செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவை பொறுத்துக் கொள்ளப்படாது.

இந்த வீடியோவை உருவாக்குவது, பதிவேற்றுவது, பகிர்வது, மற்றவர்களுக்கு அனுப்புவது அல்லது மீண்டும் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த வீடியோவின் எந்தப் பகுதியையோ, மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தையோ வைத்திருப்பவர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தளங்கள், கணக்குகள், குழுக்கள் மற்றும் சாதனங்களில் இருந்து அதை நீக்க வேண்டும்.

எனவே, அனைவருக்கும் நான் விடுக்கும் எச்சரிக்கை..

இந்த உள்ளடக்கத்தை உருவாக்கியவர்கள், வெளியிட்டவர்கள் அல்லது பரப்பியவர்கள் ஒவ்வொருவர் மீதும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் குற்றவியல் மற்றும் சிவில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவேன். இந்த வீடியோவைத் தொடர்ந்து பகிர்பவர்களும் சட்ட நடவடிக்கைக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

எனது நலம் விரும்பிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினரிடம் இந்த வீடியோவைப் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இணையத்தில் எங்கு இந்த வீடியோ தென்பட்டாலும் அதுகுறித்து புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது அனைத்து சட்ட உரிமைகளையும், சட்டரீதியான தீர்வுகளைப் பெறுவதற்கான உரிமைகளையும் நான் தக்க வைத்துக் கொள்கிறேன்" என்று சுனைனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தானா, கத்ரீனா கைப் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் கடந்த காலங்களில் இதுபோன்ற டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்ப தாக்குதல்களுக்கு ஆளாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இப்போது நடிகை சுனைனா விடுத்துள்ள இந்தச் சட்டப்பூர்வ எச்சரிக்கை திரையுலகில் மீண்டும் ஒரு பெரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது....!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+