ஆவின் பொருட்கள் விலை உயர்வு.. இதுதான் வெற்றி தீபாவளி பரிசு திட்டமா? எடப்பாடி பழனிசாமி நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகராக இருக்கும் போது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட சினிமா டிக்கெட்டுகளை விலை உயர்த்தி பிளாக் டிக்கெட்டாக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து விலை உயர்த்திவிட்டீர்களோ என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்புயுள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், தமிழக அரசின் நிறுவனமான ஆவின் பொருட்கள் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் நெய், மில்க் ஷேக், மைசூர்பா, பட்டர் உள்ளிட்ட 63 ஆவின் பொருட்களின் விலை நாளை முதல் விலை உயர்த்தப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edappadi Palaniswami

ஆவின் நிறுவன அறிவிப்பின்படி, 100 நெய் ரூ.85ல் இருந்து ரூ.95ஆகவும், 100 கிராம் ரசகுல்லா ரூ.45ல் இருந்து ரூ.50 ஆகவும், 100 கிராம் வெண்ணெய் ரூ.60ல் இருந்து ரூ.70ஆகவும், கால் கிலோ குலோப்ஜாமுன் ரூ.100ல் இருந்து ரூ.115ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கால் கிலோ மைசூர்பாக் ரூ.140ல் இருந்து ரூ.160ஆகவும், 200 மி லிட்டர் லஸ்ஸி ரூ.20ல் இருந்து ரூ.23ஆகவும், 500 மிலி ஆவின் நெய் ரூ.365ல் இருந்து ரூ.400ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு "வெற்றி தீபாவளி" பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு. மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை?

வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால் இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது. நடிகராக இருக்கும் பொது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி "Black Ticket"-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ?

பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்! "அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்" என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை Assign செய்துள்ளீர்கள் முதலமைச்சரே? மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+