"6 மனைவிகள்.." கணவரின் உல்லாச வாழ்க்கை! ஆனா இது போதாதாம்.. அடுத்த பிளான் தெரியுமா! கதறும் 90s கிட்ஸ்
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் ஒருவர் 6 மனைவிகளுடன் குதூகலமான ஒரு வாழ்க்கையை நடத்தி வருகிறார். தனக்கு புதியதொரு பிரச்சினை வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், அதைப் பார்த்து நெட்டிசன்கள் கதறி வருகின்றனர்.
இந்த நவீனக் காலத்தில் எல்லாமே மாறி வருகிறது. பல ஆண்டுகளாக நாம் தவறு என்று இந்த சமூகம் நினைத்த பல விஷயங்களும் கூட சமூகத்தில் இப்போது பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் விஷயமாக மாறிவருகிறது.
இதுபோன்ற மாற்றங்கள் யாராலும் தடுக்க முடிவதில்லை. அப்படி உலகெங்கும் நடக்கும் சில சம்பவங்கள் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறுகிறது. அப்படியொரு சம்பவத்தைத் தான் இப்போது பார்க்கவுள்ளோம்.

டேட்டிங்
ஆன்லைன் உலகில் எல்லாம் இப்போது செயலி வழியாக என்று மாறிவிட்டது. குறிப்பாக இணைய வழி டேட்டிங் என்புத டேட்டிங் கலாச்சாரத்தையே முற்றிலுமாக மாற்றிவிட்டது. முன்பெல்லாம் ஒருவரை டேட்டிங் செய்யவே பல காலம் ஆகும் என்ற இருந்த நிலை மாறி, இப்போது டேட்டிங் செயலிகளால் குறுகிய நேரத்தில் பலரை டேட் செய்ய முடிகிறது. பிரேக் அப் என்றால் அடுத்த நொடி அவர்கள் மொபைலில் வருவது இதுபோன்ற டேட்டிங் செயலியாகத் தான் இருக்கிறது. இன்னும் சிலர் காதலிக்கும் போதே கூட மற்றவர்களையும் டேட்டிங் செய்கிறார்கள்.

பாலிகாமி
இதுபோல ஒருவர் ஒரே நேரத்தில் பல பேருடன் உறவில் இருக்கும் முறை இப்போது பரவலாக ஏற்பட்டு வருகிறது. இது பாலிகாமி எனப்படும் பலதரப்பட்ட மனம் அல்லது பலதரப்பட்ட காதல் என்று அழைக்கப்படுகிறது. ஏற்கனவே இதை இந்த காலத்தில் சில நாடுகளில் ஏற்கத் தொடங்கிவிட்டனர். இப்படி பிரேசில் நாட்டில் ஒருவரையே பலரும் திருணம் செய்த சம்பவம் தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த நபர் இப்போது ஆறு மனைவிகளுடன் ஜாலியாக வாழ்ந்து வந்தார்.

6 மனைவிகள்
இப்போது இவருக்கு புதியதொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் பார்க்கலாம். ஆறு மனைவிகளைக் கொண்ட இவர், ஒவ்வொரு மனைவியுடனும் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இது நல்ல விஷயம் தானே இதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா.. இதில் என்ன குழப்பம் என்றால், மொத்தம் 6 மனைவிகள் இருப்பதால், யாரை முதலில் கர்ப்பமாக்குவது என்பது தான் இவருக்குக் குழப்பமாம். இதை முடிவு செய்ய முடியாமல் தான் அவர் போராடி வருகிறாராம்.

பிரேசில்
பிரேசில் நாட்டின் சாவோ பாலோவைச் சேர்ந்த 37 வயதானவர் ஆர்தர் ஓ உர்சோ.. இவருக்கு மொத்தம் 9 பேருடன் திருமணமாகியுள்ளது. ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக அவர் மூன்று பேரை விவாகரத்து செய்துவிட்டார். இப்போது அவருக்கு மொத்தம் 6 மனைவிகள்- லுவானா கசாகி (27) எமெல்லி சோசா (21), வால்குரியா சாண்டோஸ்(24), ஒலிண்டா மரியா (51), டாமியானா (23), அமண்டா அல்புகெர்கி (28) என்று ஆரை மனைவிகள் உள்ளனர். இவர்கள் 6 பேருடனும் குழந்தை வேண்டும் என்பதே இந்த பிளேபாயின் விருப்பமாக உள்ளது.

என்ன பிரச்சினை
ஆனால், ஒருவர் மட்டும் முதலில் கர்ப்பமடைந்தால் மற்றவர்கள் சோகமடைவார்களே என்பதே இவருக்கு இப்போது இருக்கும் பெருங்குழப்பம். இது குறித்து அவர் கூறுகையில், "எனது ஆறு மனைவிகளில் யாரையும் வருத்தப்படுத்த நான் விரும்பவில்லை.. இதனால் பிரச்சினை வராமல் இருக்க வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்"என்கிறார். ஆர்தர் ஏற்கனவே முன்பு உறவில் இருந்த பெண்ணுடன் 10 வயதில் மகள் ஒருவர் உள்ளார். எனவே, இப்போது மகன் வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது.

கடைசியில் ஒரு பிளான்
முதல் மனைவி லுவானாவின் முட்டையைப் பெற்று அதன் மூலம் முதலில் குழந்தையைப் பெற்ற கொள்வார் என்றே தெரிகிறது. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அனைத்து மனைவிகளுடனும் குழந்தை வேண்டும் என்பதால், முதலில் ரொம்பவே குழம்பிப் போனோம். இப்போது வாடகைத் தாய் முறையே சிறந்தது என்று முடிவு செய்துள்ளோம். இப்போது வாடகைத் தாயைத் தான் நாங்கள் தேடி வருகிறோம்" என்கிறார். இதற்காக ஆர்தர் $40,798 (ரூ. 33 லட்சம்) செலவழிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

அடுத்த ஆசை
மேலும், வரும் காலத்தில் குழந்தையைத் தத்தெடுக்கும் திட்டத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். 37 வயதான இவர், 10 பேரைத் திருமணம் செய்து கொண்டு, ஒவ்வொருவருடனும் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதே தனது கனவு என்று முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் இந்தத் தகவல் வேகமாகப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ் சாபம் விடாத குறையாகப் புலம்பித் தள்ளுகிறார்கள்.












Click it and Unblock the Notifications