ரஷ்யாவில் பிடிபட்ட சைக்கோ கொலைகாரன்.. பெண்களை ரேப் செய்து பின்.. கொடூர சைக்கோ செய்த பகீர் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த 52 வயது நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் 60க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் இந்த கொடூரனுக்கு கருத்தடை ஆப்ரேசன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இரட்டை வாழ்க்கை

இரட்டை வாழ்க்கை

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியைச் சேர்ந்தவர் பாவெல் ஷுவலோவ். 52 வயதான இவர், அப்பகுதியில் புல்டோசர் டிரைவராக உள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இர்குட்ஸ்க் பகுதியைச் சேர்ந்த அனைவருமே பாவெல் ஷுவலோவ் நல்ல மதிக்கத்தக்க நபர் என்றே தெரிவித்துள்ளனர். அவரது இரட்டை வாழ்க்கை குறித்துத் தெரிந்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.

30 ஆண்டுகள்

30 ஆண்டுகள்

கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் பாவெல் ஷுவலோவ் 60க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை அந்த நபர் பாலியல் வன்புணர்வு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அந்த நபரே ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் 13 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் ஆவர். இருப்பினும், பாதிக்கப்பட்ட பல பெண்களும் அந்த நபருக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க மறுத்துவிட்டனர். இத்தனை ஆண்டுகள் போலீசார் கைகளில்படாமல் தப்பித்தவர், மீண்டும் வந்து ஏதாவது செய்துவிடுவார் என்ற அச்சத்தில் பெண்கள் வாக்குமூலம் அளிக்க மறுத்துள்ளனர்.

படுத்துத் தூங்கிவிடுவான்

படுத்துத் தூங்கிவிடுவான்

பெண்களைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்யும் இந்த கொடூர சைக்கோ, அவர்கள் மீதே படுத்துப் பல மணி நேரம் குறட்டை விட்டு தூங்கிவிடுவானாம். 150 கிலோ எடையுள்ள இந்த நபர் மேலே படுத்திருப்பதால், பாதிக்கப்பட்டும் பெண்களால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பாலியல் வன்புணர்வு செய்த பெண்களில் சிலரை இந்த சைக்கோ கொலையும் செய்துள்ளான். சிறுமிகள் சிலரையும் இந்த கொடூரன் அதேபோல பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

என்ன செய்வான்

என்ன செய்வான்

பொதுவாக, கத்தியைக் காட்டி மிரட்டும் இந்த சைக்கோ அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் செல்வானாம். பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவதால், பெண்களால் தப்ப முடியாது. அப்படித் தப்ப முயன்றவர்களையும் இந்த சைக்கோ அடித்துத் துன்புறுத்தியுள்ளான். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குப் பெண்களை அழைத்துச் செல்லும் இவன். அங்குப் பல மணி நேரம் வரை பெண்களைக் கொடுமைப்படுத்துவான் என்றும் போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்படும் பெண்கள் மீது தூங்கும் இந்த சைக்கோ, எழுந்த பிறகு அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவான் என்றும் போலீசார் குறிப்பிட்டனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இந்த வழக்கில் சுமார் 15,000க்கும் மேற்பட்டோரிடம் ஜீன் டெஸ்ட் நடத்திய போலீசார், இறுதியில் 3000 பேரிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் தான் செய்த குற்றத்தை இந்த சைக்கோ ஒப்புக்கொண்டான். பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் இந்த கொடூரனுக்கு ஆண் உறுப்பு நீக்க ஆப்ரேசன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

24 ஆண்டுகள் சிறை

24 ஆண்டுகள் சிறை

தற்போது இரண்டு கொலை மற்றும் 2 பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ள இந்த நபருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாவெல் ஷுவலோவ் மீதான குற்றச்சாட்டுகள் நம்பும்படி இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் தந்தை இரட்டை வாழ்க்கையை நடத்தி வந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+