பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்.. இஸ்ரேலுக்கு மிக பெரிய சிக்கல்.. கையை பிசையும் நெதன்யாகு
மாட்ரிட்: காசா பிராந்தியத்தில் மோதல் நிலவி வரும் நிலையில், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஸ்பெயின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இது இஸ்ரேலுக்கு மிக பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது.
பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு அந்தஸ்து கேட்டுப் பல காலமாகப் போராடி வருகிறார்கள். பெரும்பாலான உலக நாடுகள் இத்தனை காலம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காமலேயே இருந்தது.

ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் இடையே காசாவில் போர் ஏற்படத் தொடங்கிய பிறகு நிலைமை மாற தொடங்கியுள்ளது. இப்போது பல்வேறு நாடுகளும் வரிசையாக இஸ்ரேலுக்கு வரிசையாக அங்கீகரித்து வருகிறது.
ஸ்பெயின்: அதன்படி ஸ்பெயின் இப்போது பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இன்று மே 28ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவை எடுத்துள்ளதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தார். இஸ்ரேல்- ஐரோப்பிய ஒன்றியம் இடையே உறவு மோசமடைந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவை இப்போது ஸ்பெயின் எடுத்துள்ளது.
சமீபத்தில் மட்டும் 12க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ள நிலையில், இப்போது அந்த லிஸ்டில் ஸ்பெயின் இணைந்துள்ளது. இன்று நடக்கும் கூட்டத்தில் அயர்லாந்து, நார்வே நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க உள்ளது. அதேநேரம் இதுவரை மேற்கத்திய நாடுகள் எதுவும் இதுவரை பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின் பிரதமர்: இது குறித்து ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் கூறுகையில், "இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும்.. இதன் இலக்கு ஒன்றே ஒன்றுதான்.. இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்த இலக்காகும். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு, அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்து வருகிறது. நார்வே இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை என்ற போதிலும்.. பெரும்பாலான நேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவையே வெளியுறவு விவகாரங்களில் நார்வேயும் எடுக்கும். அதன்படியே இன்று ஒரே நாளில் 3 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளது.
இஸ்ரேல் அதிருப்தி: இந்த முடிவால் இஸ்ரேல் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. ஒட்டுமொத்த பாலஸ்தீனமும் இஸ்ரேல் நாட்டின் ஒரு பகுதி என்பதே இஸ்ரேலின் நிலைப்பாடாக இருக்கிறது. இதனால் உலக நாடுகள் வரிசையாகப் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது இஸ்ரேலுக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் நார்வே மற்றும் அயர்லாந்து நாடுகளின் தூதர்களைத் திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், "பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருகிறோம் என்ற செய்தியையே அயர்லாந்து மற்றும் நார்வே அரசுகள் இதன் மூலம் உலகிற்குச் சொல்லியுள்ளன. பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவது, காசாவில் உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும்.. ஸ்பெயின் அரசு தூதரை வாபஸ் பெறுவது குறித்து விரைவில் முடிவு செய்வோம்" என்றார்.
ஐரோப்பிய ஒன்றியம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவை எடுத்தாலும் கூட பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் இது சரியான நேரமாக இருக்காது எனக் கருத்து கூறியுள்ளன. இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு அங்கீகாரம் தர வேண்டும் என்பது ஜெர்மனி நிலைப்பாடாக இருக்கிறது.
இப்போது ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே நாடுகளின் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள நிலையில், இதன் மூலம் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளன. ஐநா சபையில் 193 உறுப்பு நாடுகள் இருக்கும் நிலையில், அதில் இப்போது 145 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளது. இதில் பல நாடுகள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் ஆகும். அதேநேரம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா நாடுகள் எதுவும் இதுவரை பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications