"செங்கல் கூட மிஞ்சவில்லை.." நொடிகளில் தரைமட்டமான மொராக்கோ.. பேரழிவுக்கு உண்மையில் என்ன காரணம்
ரபாத்: மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ரொம்பவே மோசமாக இருக்கும் நிலையில், அங்குக் கிராமங்கள் இப்போது எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாம்.
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடான மொராக்கோவை நிலநடுக்கம் புரட்டிப் போட்டது. வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவானது. அங்கே கடந்த 120 ஆண்டுகளில் பதிவான மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது இருக்கிறது.

இரவு அனைவரும் தூங்கிய நேரத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் பலரும் கட்டிடத்திற்குள் சிக்கினர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2100ஐ தாண்டியுள்ள நிலையில், காயமடைந்தோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் முடியாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பூகம்பம்: இந்த நிலநடுக்கம் மொராக்கோவை மிக மோசமாகப் பாதித்துள்ளது. அங்குள்ள ஒரு கிராமம் இந்த நிலநடுக்கத்தால் மொத்தமாகத் தரைமட்டமாகியுள்ளது. அந்த கிராமத்தில் சின்ன கிராமத்தில் ஏற்கனவே 68 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட அட்லஸ் மலைகளில் இருந்து சில கிமீ தூரத்தில் அமைந்துள்ள திக்த் கிராமத்தில் தான் இந்தளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் பாதிப்புகள் ரொம்பவே மோசம்.
அங்கே மீட்புப் பணிகளில் ஈடுபட்டோர் எங்காவது மூலையில் ஒரு குரலாவது கேட்குமா.. யாரையாவது உயிருடன் மீட்க முடியுமா என்று தீவிரமாகத் தேடி வருகிறார்கள். ஒட்டுமொத்த திக்த் கிராமும் இப்போது சின்னாபின்னமாகிப் போய் இருக்கிறது. இந்த கிராமத்தில் செங்கல் கூட மிஞ்சவில்லை. அத்தனை கட்டிடமும் தரைமட்டமாகி இருக்கிறது.

பேரழிவு: அந்த கிராமத்தில் வசிக்கும் 25 வயதான உமர் ஐட் எம்பரேக் என்பவருக்கு சில வாரங்களில் திருமணம் நடந்திருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் வெளியே இருந்த இவர், நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன் மொபைலில் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் லைனில் இருக்கும் போதே நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழ அந்த பெண்ணின் அலறல் சத்தத்தை இவர் கேட்டுள்ளார்.
அட்லஸ் மலைக்கு அருகிலேயே இருப்பதால்.. இந்த கிராமம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இது குறித்து அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் கூறுகையில், "இங்கே அவ்வளவுதான்.. மொத்தமாகக் கிராமமே தரைமட்டமாகிவிட்டது. இங்கே இனிமேல் எதுவும் செய்ய முடியாது.. ஒட்டுமொத்த கிராமமும் செத்துவிட்டது" என்கிறார்கள்.
என்ன காரணம்: இந்த கிராமத்தில் இருக்கும் வீடுகள் பாரம்பரிய கற்கள், மணல், மரங்களைக் கொண்டு கட்டப்பட்டதாக இருந்தது. இங்கே பாதிப்பு இந்தளவுக்கு மோசமாக இதுவே காரணமாக அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் இதற்கு முன்பு இதுபோல நிலநடுக்கம் ஏற்பட்டதே இல்லையாம். இதனால் பொதுமக்கள் இங்கே வீடுகளைக் கட்டும்போது, நிலநடுக்கம் குறித்தெல்லாம் சிந்தித்தே இல்லை. இந்தச் சூழலில் தான் ஒற்றை நிலநடுக்கம் இந்த ஒட்டுமொத்த கிராமத்தையும் காலி செய்துள்ளது.
இங்கு மட்டுமில்லை. மொராக்கோ நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இதுதான் நிலை. அங்கே இந்தளவுக்கு வலுவான நிலநடுக்கம் ஏற்படும் என்று யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை. இதன் காரணமாக அங்குள்ள கட்டிடங்கள் எதுவும் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்படவில்லை. பாதிப்புகள் மோசமாகி, அப்படியே கட்டிடங்கள் சரிந்து விழ இதுவே காரணமாகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications