88% பலியாக வாய்ப்பு.. ஆப்பிரிக்காவில் பரவும் மார்பர்க் வைரஸ்.. புதிதாக கிளம்பிய பூதம்.. ஷாக் தகவல்
மத்திய ஆப்பிரிக்கா நாடான ஈக்வடோரியல் கினியாவில் மார்பர்க் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் பலியாகி உள்ளனர். 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மலாபோ: மத்திய ஆப்பிரிக்கா நாடான ஈக்வடோரியால் கினியா நாட்டின் புதிதாக மார்பர்க் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 9 பேர் பலியான நிலையில் 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். எபோலா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த மார்பர்க் வைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசி இல்லாத நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் 88 சதவீத உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்ற ஷாக் தகவல் வெளியான நிலையில் அதன் அறிகுறி என்ன? மக்கள் எப்படி மார்பர்க் நோயில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது.
ஆப்பிரிக்கா நாடுகளில் அவ்வப்போது புதிய வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது மத்திய ஆப்பிரிக்கா நாட்டில் புதிய வைரஸ் நோய் பரவி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா, குரங்கு அம்மை உள்ளிட்ட நோய் பாதிப்புகளில் இருந்து ஒட்டுமொத்த உலகமும் தற்போது மீண்டு வரும் நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் இந்த வைரஸ் நோய் பரவுவது பற்றி உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

மார்பர்க் வைரஸ் பாதிப்பு
மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்று ஈக்வடோரியல் கினியா. மிகச்சிறிய நாடான இங்கு கீன்டெம் மகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் தான் தற்பாது மார்பர்க் வைரஸ்(Marburg Virus) நோய் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதுனை அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மித்தோ ஒன்டோ வ அயிகபா உறுதி செய்துள்ளார். மேலும் உலக சுகாதார நிறுவனமும் மார்பர்க் நோய் பரவலை உறுதி செய்துள்ளது.

9 பேர் அடுத்தடுத்து பலி
ஈக்வடோரியல் கினியாவில் தற்போதைய சூழலில் 9 பேர் அடுத்தடுத்து மார்பர்க் வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நிலையில் தற்போது 16 பேர் பாதிக்கப்பட்டுள்னளர். இதுபற்றி உலக சுகாதார அமைப்பு கூறுகையில், ‛‛மார்பர்க் வைரஸ் நோய் பரவல் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும், நோயின் அறிகுறிகளை கொண்டவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளது.

எப்படி பரவும்?
இந்த மார்பர்க் வைரஸ் பாதிப்பு என்பது எபோலா வைரஸ் பாதிப்பை போல் இருக்கும். ஏனென்றால் இரண்டும் ஒரே குடும்ப வகையை சேர்ந்தது தான். இந்த மார்பர்க் வைரஸ் பாதிப்பு என்பது 24 சதவீதம் முதல் 88 சதவீதம் வரை உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மார்பர்க் வைரஸ் பழந்தின்னி வவ்வால்களில் இருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவும். இருப்பினும் இது பழந்தின்னி வைரஸை பாதிக்காது.

அறிகுறிகள் என்ன?
மார்பர்க் வைரஸ் பாதிப்புக்கு காய்ச்சல் வாந்தி, பிறப்புறுப்பில் ரத்த கசிவு, வயிற்றோட்டம் உள்ளிட்டவை மார்பர்க் வைரஸ் பாதிப்பின் அறிகுறியாகும். தீவிர காய்ச்சல், கடும் தலைவலி உள்ளிட்ட அறிகுறியுடன் ரத்த கசிவு ஏற்பட்டு 2 நாளில் மார்பர்க் வைரஸ் பாதிப்பை உறுதி செய்யலாம். மேலும் 7 நாட்களில் கடும் ரத்த கசிவு உண்டாகி மரணம் கூட ஏற்படலாம் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி இல்லை
இந்த மார்பர்க் நோயை ஆர்டிபிசிஆர் சோதனை மூலம் கண்டறியலாம். இதற்கு இன்னும் தடுப்பூசிகள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இந்த நோய் பாதித்தால் டாக்டர்கள் அறிவுரையில் பொதுவான சிகிச்சைகள் மேற்கொள்வது என்பது முக்கியமாகும். இந்த நோய் பெரும்பாலும் ஆப்பிரிக்கா நாடுகளவில் பரவி வருகிறது. இதற்கு முன்பு கானா உள்ளிட்ட பல ஆப்பிரிக்கா நாடுகளில் மார்பர்க் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications