ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின் கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி.. லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு
ஒட்டாவா: கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவி ஏற்கவுள்ளார். லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின் அந்நாட்டின் புதிய பிரதமராகவும், லிபரல் கட்சியின் தலைவராகவும் மார்க் கார்னி பதவி ஏற்கவுள்ளார்.
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ளார். இவர் 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கனடா வங்கியின் எட்டாவது ஆளுநராகப் பணியாற்றியுள்ளார். நிதி நிலைத் தன்மை வாரியத்தின் தலைவராகவும் 2011 முதல் 2018 வரை பணியாற்றியுள்ளார். லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில், மார்க் கார்னி 1 லட்சத்து 31 ஆயிரத்து 674 வாக்குகளைப் பெற்றார். மொத்த வாக்குகளில் 85.9 சதவீத வாக்குகளையும் மார்க் கார்னி பெற்றிருந்தார்.

தலைமைப் பதவிக்கு போட்டியிட்டவர்களான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் 11,134 வாக்குகளையும், கரினா கோல்ட் 4,785 வாக்குகளையும், பிராங்க் பேலிஸ் 4,038 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இதைத்தொடர்ந்து, லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
கனடாவின் பிரமரான ஜஸ்டின் ட்ரூடோ ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல, லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமரும், லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்னர் இவர் 24 ஆவது புதிய பிரதமராகப் பதவி ஏற்கிறார். லிபரல் கட்சியின் தலைவராகவும் பதவி ஏற்கவுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications