செவ்வாய் கிரகம் ஏன் இறந்து போனது? நீண்ட கால கேள்விக்கு.. விடை கிடைத்துவிட்டது!
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் இப்போது நீர் கிடையாது. நீண்ட காலத்திற்கு முன்பே இந்த கிரகம் இறந்து போய்விட்டது. இது எப்படி இறந்தது? இங்கிருந்த நீர் எப்படி காணாமல் போனது? மிக குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் ஏன் பிளவுகள் இருக்கின்றன? என்கிற கேள்விகள் நீண்ட காலமாக விஞ்ஞானிகள குழப்பி வந்தது. இந்நிலையில், இதற்கான விடையை தற்போது அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆய்வுகளை செய்து வருகிறது. இதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட தரவுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில்தான் நமக்கு பதில் கிடைத்திருக்கிறது.

அதாவது, இரண்டு தினங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் 'Gale' எனும் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த ரோவர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இங்கு ஒரு காலத்தில் நீர் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவேதான் இங்கு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், மவுண்ட் ஷார்ப் சரிவுகளில் சிலந்தி வலை போன்ற பாறை அமைப்புகளை ரோவர் படம் பிடித்து அனுப்பியுள்ளது. 'Boxwork' என்று சொல்லப்படும் இதை பற்றி நாம் இதற்கு முன்னர் ஆய்வு செய்தது கிடையாது.
மேலிருந்து இவை பார்க்கும்போது வலைகள் போல தோன்றும். ஆனால், சிலந்தி கட்டிய வலை கிடையாது. ஒரு காலத்தில் இந்த கிரகத்தில் இருந்த நீர் நிலத்தடிக்கு சென்றிருக்கிறது. இது போன பாதைகளில் தடத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தடம்தான் தற்போது சிலந்தி வலையை போல தெரிகிறது. மட்டுமல்லாது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக காற்றின் அரிப்பு காரணமாக, மென்மையான பாறைகள் தேய்ந்து போய் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.
இந்த அமைப்புகளை கவனமாக ஆய்வு செய்யும்போது அதில், 'கால்சியம் சல்பேட்' இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கால்சியம் சல்பேட் என்பது நிலத்தடி நீர் ஆவியாகும் போது உருவாகும் ஒரு உப்பு கனிமம் ஆகும். இதை வைத்துதான், நீர் நிலத்திற்கு அடியில் ஊடுருவி சென்றிருக்கிறது என்று விஞ்ஞானிகள் உறுதியாக கூறுகின்றனர்.
செவ்வாய் கிரகத்தில் கால்சியம் சல்பேட் இருப்பதை ஏற்கெனவே இந்த ரோவர் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் இந்த பள்ளத்தாக்கு பகுதியில் கால்சியம் சல்பேட் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை.
நாசாவின் ஜெட் புரொபல்ஷன் ஆய்வகத்தின் கியூரியாசிட்டி துணை திட்ட விஞ்ஞானி அபிகாயில் ஃபிரேமன் இது குறித்து கூறுகையில், "இந்த சிலந்தி வலை பல கி.மீ தூரத்திற்கு பரந்து விரிந்திருக்கிறது. ஆனால் எந்த ஆர்பிட்டரும் இதை கண்டுபிடிக்கவில்லை. அவ்வளவு ஏன் கியூரியாசிட்டி ரோவர் கூட இந்த பகுதியில் நிறைய சுற்றியிருக்கிறது. ஆனால், இப்போதுதான் இந்த வலையை கண்டுபிடித்திருக்கிறது.
கியூரியாசிட்டி பயணத்தின் மிகப்பெரிய நோக்கம், செவ்வாய் கிரகத்தில் எப்போதாவது உயிர்கள் இருந்தனவா என்பதுதான். தற்போதைய கண்டுபிடிப்புகள், நம்முடைய தேடலுக்கு வலு சேர்த்திருக்கின்றன. இங்கு மக்னீசியம் சல்பேட்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உப்பு நீர் ஆவியாகும்போது இது உருவாகும். உப்பு நிறைந்த நீர் பாதுகாக்கப்பட்ட நிலத்தடி இடங்களில் பாய்ந்தால், பூமியில் உள்ளதை போல உயிர்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
ஆக இந்த ஆய்வில் உயிர்கள் இருப்பதான தேடலுக்கு கூடுதல் பலன்கள் கிடைத்துள்ளன. அதேபோல, செவ்வாய் கிரகத்தில் உள்ள தண்ணீர் ஆவியாகி காணாமல் போயிருக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications