சாதாரண மக்களின் அசாதாரணத் தலைவி ஜெயலலிதா!- டாக்டர் ராஜன்
வாஷிங்டன்: சாதாரண மக்களின் அசாதாரண தலைவியாகத் திகழ்ந்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று மேரிலாண்ட் மாகாண போக்குவரத்து ஆணையர் டாக்டர் ராஜன் நடராஜன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், மேரிலாண்ட் மாநிலத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலராக கவர்னர் ஓமேலி அரசில், 2011 முதல் 2014 வரை அங்கம் வகித்து, பின் தற்போது அம்மாநில போக்குவரத்து ஆணையராகப் பணிபுரியும் டாக்டர் ராஜன் நடராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

செல்வி. ஜெயலலிதா அவர்களின் மறைவு குறித்து மிகுந்த வருத்தமுற்றேன். செல்வி ஜெயலலிதா சாதாரண மக்களுக்காகப் பாடுபட்ட ஒரு அசாதாரணத் தலைவி ஆவார். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, அவருடைய அர்ப்பணிப்பு மகத்தானது. அம் மக்களின் மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த தமிழகத்தின் மேம்பட்டிற்காகவும் அவர் தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டார்.
இத்தகைய திட்டங்களை வேற்று மாநில முதல்வர் எவரும் கொண்டு வர இயலவில்லை என்பதே உண்மை. செல்வி. ஜெயலலிதா ஏழை எளியவர்களின் ஏழ்மை நிலையைப் போக்குவதே தம் வாழ்வின் இலட்சியமாக மேற்கொண்டிருந்தார். அவர்களின் கனவுகளை நனவாக்க அரும்பாடு பட்டார். அவர், எளியவர்களின் ஒளிவிளக்காக அவர்களுக்குப் பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது.
ஜெயலலிதா ஒரு இரும்பு போன்ற திண்ணம் கொண்ட ஈடு இணையற்ற தலைவி. மகளிர் சக்தி என்பதன் அடயாளச் சின்னம். பெண்கள் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டவர்.
தமக்குக் குழந்தகள் இல்லையென்றாலும், இலட்சக் கணக்கான ஏழைக் குழந்தைகளின் தாயாக விளங்கியவர். அதுமட்டுமன்றி, அனைத்துத் தர மக்களால் 'அம்மா' என்று அன்போடு அழைக்கப் பட்டவர். "மக்களால் நான்; மக்களுக்காக நான்" என்ற தாரக மந்திரத்தினை உதிர்த்துக் கொண்டிருந்தவர்.
எண்ணத்தில் அடங்காத ஒரு சகாப்தம் முடிவடைந்தது. "எதையும் தாங்கும் இதயம்" என்ற அறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்பத் திகழ்ந்தவர். அவருடைய துணிச்சல், தொலைநோக்குப் பார்வை, நினைத்ததை சாதிக்கும் தன்னம்பிக்கை மூலம், தமிழக அரசியில் மட்டுமன்றி, இந்திய அரசியல் களத்தில் தமக்கென ஒரு இடத்தை உறுவாக்கிக் கொண்டவர். அவர் விட்டுச் சென்றது ஒரு வெற்றிடமே!
ஜெயலலிதா மறைவினால் அமெரிக்க வாழ் தமிழர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் ஒரு மாபெரும் தலைவி. அரசியலிலும், பொது வாழ்விலும் அனைவரது மரியாதைக்குப் பாத்திரமாகி யாரும் இட்டு நிரப்ப முடியாத ஒரு இடத்தினை விட்டுச் செல்கிறார்.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராஜன் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications