அழகிய தீயே... மர்லின் மன்றோ!
மர்லின் மன்றோ.. மறைந்து பல வருடங்கள் ஓடிய பின்னரும் இன்னும் ரசிகர்களின் மனதிலிருந்து நீங்காத ஹாலிவுட் மலர்.
இவரது அழகுக்கு ஈடு இணை இல்லை என்பார்கள். உண்மைதான். அந்தக் காலத்து கருப்பு வெள்ளைப் படங்கள் சிலவற்றைப் பார்த்தபோது அவர்கள் சொல்வதில் சற்றும் பொய் இல்லை என்பது புரிந்தது.
லாரன்ஸ் ஷில்லர் என்பவர் மர்லின் மன்றோவின் அழகிய தருணங்கள் சிலவற்றைப் படம் பிடித்துள்ளார். இவர் மன்றோவின் பெர்சனல் புகைப்படக் கலைஞர் ஆவார்.
மர்லினைக் கவர்ச்சிகரமான பார்வையுடன் பார்த்தால் அதேபோலத் தெரிவார். அழகுணர்ச்சியோடு பார்த்தால் அழகோவியமாக மிளிர்வார்.. சாதாரணமாக பார்த்தால் அதே உணர்வுடன்தான் தெரிவார். எல்லோருக்கும் கைகூடாத அழகியல் அம்சம் இது.
மன்றோவின் அழகை அற்புதமாக வெளிக் கொணர்ந்தவர்களில் லாரன்ஸ் ஷில்லரும் ஒருவர்.

மாஸ்கோ கண்காட்சியில் ஷில்லர்
லாரன்ஸ் ஷில்லரின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி ஒன்று மாஸ்கோவில் சமீபத்தில் நடந்தது.

20ம் நூற்றாண்டின் இணையற்ற புகைப்படக் கலைஞர்
20ம் நூற்றாண்டின் இணையற்ற புகைப்படக் கலைஞர்களில் ஒருவராக மதிக்கப்படும் ஷில்லர், மறைந்த ரிச்சர்ட் நிக்ஸன், ராபர்ட் கென்னடி ஆகியோரின் அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது புகைப்படங்களை எடுக்க பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவரும் கூட.

ஹாலிவுட்டில் பிரபலம்
அதேபோல ஹாலிவுட்டில் இவர் மிகப் பிரபலம். குறிப்பாக மர்லின் மன்றோவின் நம்பிக்கைக்கும், பாசத்திற்கும் பாத்தியமானவர். மன்றோவின் பெர்சனல் புகைப்படக் கலைஞராக வலம் வந்தவர்.

22 வயதில் மன்றோவுடன்
மன்றோவுடன் பணியாற்றத் தொடங்கியபோது ஷில்லருக்கு வயது 22தான். ஆனால் அந்த இளம் வயதிலேயே நிறைய திறமை மிகுந்தவராக விளங்கினார் ஷில்லர்.

மர்லின் கதை
புகைப்படக் கலைஞராக மட்டுமல்லாமல் இயக்குநராக, தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர் ஷில்லர். 1980ம் ஆண்டு இவர் மர்லின்- தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற படத்தை தயாரித்து இயக்கினார். இப்படம் எம்மி விருதைப் பெற்றது.

நிர்வாண மன்றோ
மன்றோ நடித்த கடைசிப் படம் சம்திங்ஸ் காட் டு கிவ்.. இப்படம் கடைசி வரை வெளிவரவில்லை. இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது மன்றோவின் சில அந்தரங்கமான போஸ்களைப் படம் பிடித்துள்ளார் ஷில்லர். அவை மாஸ்கோ கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அதில் மன்றோ நிர்வாண கோலத்தில் காணப்படுகிறார்.

நீரோடு விளையாடும் மன்றோ
நீ்ச்சல் குளத்தில் யாருமில்லாத நேரத்தில் மன்றோ சுதந்திரமாக துள்ளிக் குதித்து விளையாடுகிறார். சிரிக்கிறார், நீரில் தவ்வுகிறார். போஸ் கொடுக்கிறார். இதையெல்லாம் தனது கேமராவில் அழகாக கவ்விக் கொண்டு வந்திருக்கிறார் மன்றோ.

கற்றுக் கொடுத்த மன்றோ
உண்மையில் ஷில்லருக்கு எப்படி புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதை மன்றோதான் கற்றுக் கொடுத்தாராம். இதை ஷில்லரே சொல்லியுள்ளார்.

77 வயதிலும் ஸ்டில் எடுக்கிறார்
இப்போது ஷில்லருக்கு 77 வயதாகிறது. இப்போதும் கூட அவர் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.. மன்றோ புகழ் பாடியபடி.!
படங்கள்: லாரன்ஸ் ஷில்லர்.












Click it and Unblock the Notifications