For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மசூத் அசார் நலமோடு, உயிரோடு இருக்கிறார்.. கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது மறுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    மசூத் அசார் நலமோடு, உயிரோடு இருக்கிறார்-ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தகவல்- வீடியோ

    இஸ்லாமாபாத்: தங்களது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் நலமாகவும், உயிரோடும் இருப்பதாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த மாதம், 26ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் உள்ள பாலக்கோட் என்றப் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடியாக குண்டு வீசின.

    Masood Azhar is alive, says Jaish-e-Mohammad

    இதில் பல தீவிரவாதிகள் கொத்தோடு கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, சமீபத்தில் அளித்த பேட்டியில், மசூத் அசார் தீவிர உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், இந்திய விமானப்படை தாக்குதலில் சிக்கி மசூத் அசார் உயிரிழந்ததாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வந்தன. ஆனால், இதனை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மசூத் அசார், நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஊடகங்களும் இதையே தெரிவிக்கின்றன.

    இதனிடையே மசூத் அசார் பலியானதாக வெளியான தகவல் குறித்து இந்திய உளவுத்துறையும் விசாரணையைத் தொடங்கியுள்ளது

    இந்திய விமானப்படை தாக்குதல் பற்றி உலகம் நம்ப வேண்டுமே.. மோடிக்கு ப.சிதம்பரம் கேள்விஇந்திய விமானப்படை தாக்குதல் பற்றி உலகம் நம்ப வேண்டுமே.. மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

    English summary
    Few media reports claimed that JeM chief and dreaded terrorist Masood Azhar died after battling prolonged illness, others suggested that he had succumbed to his injuries after Indian Air Force (IAF) jets struck the Jaish camp in Balakot. But, Jaish-e-Mohammad says he is ‘alive and well’.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X