தோண்ட தோண்ட சடலங்கள்.. கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டுள்ளனர்.. பகீரை கிளப்பும் ஜெலன்ஸ்கி
கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டிப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது
மாஸ்கோ: கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகீர் தகவலை கிளப்பி விட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 50 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.. எத்தனையோ நாடுகள் அறிவுறுத்தியும் ரஷ்யா தன் ஆக்ரோஷத்தை குறைத்து கொள்ளவில்லை.
மற்றொருபுறம், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் படைகளும் தக்க பதிலடிகளை விடாமல் தந்து வருகின்றன... இதனால் ஏராளமான உயிரிழப்புகள், பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

900 சடலங்கள்
பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தஞ்சம் அடைந்து வருகின்றனர்.. ரஷ்யா, தான் ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து தானியங்களைத் திருடியதாக உக்ரைன் தற்போது குற்றம் சாட்ட துவங்கி உள்ளது.. இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து பயிர்களை ரஷிய படைகள் அபகரித்துள்ளதாகவும், தானியங்களை திருடியதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது... ஆனால், உக்ரைன் இந்த குற்றச்சாட்டிற்கு ரஷ்யா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

900 பேர்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தங்கள் நாட்டு தலைநகர் கீவ் சுற்றுப்புறங்களில் 900 சடலங்கள் கிடப்பதாக உக்ரைன் காவல் துறை தெரிவித்திருந்தது. அதாவது, கப்பல் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக ரஷ்ய படைகள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அந்த சடலங்களில் பெரும்பாலானவை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தடங்கள் இருப்பதாகவும் காவல் துறை அப்போது கூறியிருந்தது.. இந்த தகவல் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், மேலும் ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

900 சடலங்கள்
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டிப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளதாக அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளது, மேலும் பகீரை கிளப்பி வருகிறது.. முலும், சுமார் 5,00,000 உக்ரேனியர்கள் சட்டவிரோதமாக ரஷியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று போலந்து ஊடகத்திடம் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.. 900 சடலத்துடன், 5,00,000 உக்ரேனியர்கள் சட்டவிரோதமாக ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ள தகவலால் அங்கு பரபரப்பு மேலும் தொற்றி கொண்டுள்ளது.
Recommended Video

பதுங்குகுழிகள்
மேலும், மரியுபோல் நகரில் போரினால் பாதிக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிட இடிபாடுகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஐ.நா.சபை ஊழியர்கள் ஈடுபட்டனர்... அங்குள்ள எஃகு உற்பத்தி ஆலையின் உள்ளே நிலைமை மோசமாக உள்ளது என்றும், அங்கே பதுங்கியுள்ளவர்கள் காப்பாற்றுமாறு கெஞ்சுவதாகவும் மரியுபோல் மேயர் தெரிவித்துள்ளார். அதேபோல, தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் ரஷ்ய துருப்புகளின் முன்னேற்றத்தை தடுக்க உக்ரைனின் படைகள் தீவிரமாக போராடி வரும்நிலையில், சில நகரங்களில் பீரங்கித் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...












Click it and Unblock the Notifications