உலகிலேயே பெரிய ஊர்வலம்.. 30 கிமீ தூரத்திற்கு நின்ற மக்கள்.. சுலைமானி இறுதிச்சடங்கால் அமெரிக்கா பீதி!
அமெரிக்காவின் டிரோன் படை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியின் இறுதிச்சடங்கு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது
Recommended Video
டெஹ்ரான்: அமெரிக்காவின் டிரோன் படை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியின் இறுதிச்சடங்கு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த இறுதிச்சடங்கில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய இந்த தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதனால் ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகிறது. இந்த போர் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போராக மாறும் என்றும் கூறுகிறார்கள்.

சுலைமானி
இதையடுத்து நேற்று சுலைமானி உடல் ஈராக்கில் இருந்து ஈரான் கொண்டு வரப்பட்டது. ஈரானில் தலைநகர் டெஹ்ரானில் அவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. வடகிழக்கு நாட்டின் தலைவர்கள், ஈரான், ஈராக்கை சேர்ந்த முக்கிய தலைவர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

லட்சம் பேர்
அதேபோல் பல லட்சம் பேர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். 15 லட்சத்திற்கும் அதிகமான பேர் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். உலகிலேயே யாருடைய இறுதிச்சடங்கிற்கும் இவ்வளவு கூட்டம் கூடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் எத்தனை
மொத்தம் 30 கிமீ தூரத்திற்கு இந்த கூட்டம் நீண்டு இருந்தது. இந்த கூட்டம் எவ்வளவு தூரம் இருந்தது என்று வீடியோ வெளியாகி உள்ளது . இவ்வளவு மக்கள் அந்நாட்டு அரசுக்கு ஆதரவு தருவது, அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
|
யார் இவர்
ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் அதிகாரம் மிக்கவராக திகழ்ந்தார். சிரியா போர் வர இவரும் ஒரு வகையில் காரணம். இவரை பலமுறை இப்படி கொல்ல சதி நடந்து இருக்கிறது.
|
மிக முக்கியம்
1998ல் இருந்தே இவர் அந்த ராணுவ ஜெனரல் பொறுப்பில் இருந்தார். சுலைமானி நினைத்தால் ஈரானிலும், ஈராக்கிலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருந்தது. ஈரானை வலிமையாகியவர்களில் இவரும் முக்கியமானவர்.

மக்கள் கூட்டம்
அதனால்தான் இவரின் இறுதிச்சடங்கிற்கு இவ்வளவு மக்கள் கூடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தை பார்த்த ஈராக், அமெரிக்காவுடன் உறவை முறித்துக்கொள்ளும். அமெரிக்க படைகளை ஈராக் வெளியே அனுப்பும் என்றும் கூறுகிறார்கள்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications