குலுங்கியது ஈக்வடார்! 6.8 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சரிந்த கட்டடங்கள்! பலர் பரிதாபமாக பலி
ஈக்வடாரில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டோ: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
கடந்த மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இதில் பல ஆயிரம் பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே இப்போது ஈக்வடாரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நிலநடுக்கம்
பெரு மற்றும் ஈக்வடாரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் காயமடைந்தார். இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள பல கட்டிடங்கள் சேதமடைந்தன என்று ஈக்வடார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈக்வடாரில் உள்ள மச்சலா மற்றும் குயென்கா போன்ற நகரங்களில் இந்த நிலநடுக்கம் காரணமாகச் சேதம் அதிகமாக உள்ளது. அங்குப் பல கட்டிடங்கள் அப்படியே சரிந்துள்ளன. மேலும், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நொறுங்கின.

6.8 அளவில் நிலநடுக்கம்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி 12.12 மணிக்கு 66 கிலோமீட்டர்கள் ஆழத்தில் பெருவின் எல்லைக்கு அருகில் உள்ள ஈக்வடார் பாலாவோவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாகப் பொதுமக்கள் அஞ்சிய நிலையில், அனைவரும் கட்டிடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் முகாமிட்டுள்ளனர்.

12 பேர் உயிரிழப்பு
இதுவரை இந்த நிலநடுக்கம் காரணமாக 12 உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எல் ஓரோ மாகாணத்தில் 11 பேரின் சடலங்களும், அசுவே மாகாணத்தில் ஒருவரின் சடலமும் கண்டறியப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. குவாயாகில், குய்டோ, மனாபி மற்றும் மந்தா உள்ளிட்ட இடங்களிலும் இந்த நடுக்கம் வலுவாக உணரப்பட்டது.

சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று வலியுறுத்தியுள்ள ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ, சேதம் ஏற்படுவது குறித்து தகவல்களைப் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பரவும் போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications